விஸ்வரூபம் - அவ்ளோ சீன் இல்லிங்கோ
Monday, February 04, 2013இந்த பதிவுல நிறைய spoilerஸ் இருக்கு, இதை படிச்சா படத்தை ரசிக்க முடியாம போகலாம். இப்பவே சொல்லிட்டேன் புடிக்காதவங்க இங்கேயே எஸ் ஆயிடுங்க. படத்துல இரண்டு கதை.. ஒரு கதையில் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்குதுன்னு ஏன் ஒருத்தன் ஜிகாதி ஆவுறான்னு காட்ட முயற்சி செய்து இருக்காங்க.. இரண்டு நியூயார்க்கில் அல்கொய்தா செய்ய இருக்கும் பயங்கர ஆழிவை கமல் & குழு எப்படி முறியடிக்கிறாங்க.
படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச விஷயங்கள்
படத்தின் மொத பத்து நிமிடங்களில் கமலின் நடிப்பு, ஒ மை காட் சான்ஸே இல்லை.. ஒவ்வொரு காட்சியிலையும் நளினமான, பெண் தன்மை மிக்க ஒரு கலைஞனாக பின்னியிருப்பாரு.. அவரது நடையிலாகட்டும் செய்கையிலாகட்டும்.. ஒரு காட்சியில அவரோட Hoodஐ சரி செய்வாரு ஒரு பெண் தன்னோட புடவை தலைப்பை சரி செய்யும் பொழுது expression குடுப்பாங்க பாருங்க அது மாதிரியே செய்வாரு.. அப்படியே பிரம்பின் உச்ச கட்டத்துக்கு போயிட்டேன்.. என்ன ஒரு நடிகன்டா.
அப்கானிஸ்தான் சம்மந்தமான காட்சிகளில் கொஞ்சூன்டு ஏன் அந்த மக்கள் ஜிகாதிகளாகிறார்களுன்னு, ஏன் ஒருத்தன் மனித வெடிகுண்டு ஆவுறான்னு காட்டி இருப்பது தமிழுக்கு புதுசு நல்லாவும் இருக்கு..
படத்தின் அபத்தங்கள்
ஒரு ஜிகாதி ஒரு போஸ்டரை காட்டி இதுல இருக்குறவனை புடிச்சி குடுத்தா இந்திய ராணுவம் 5 லட்சம் குடுக்குதாம் புடிச்சி குடுத்துடலாமான்னு கேக்குறாரு அதுக்கு முல்லா உமர் ரேஞ்சுல இருக்குற ஒரு ஆளு, முட்டாள் ஜிகாதி அதுவும் தமிழ் தெரிந்த ஜிகாதி ரொம்ப கஷ்டம் அவன் நமக்கு வேணுமுன்னு சொல்றது.. டேய் நீ அல்கொய்தாவுக்கு ஆல் எடுக்குறீங்களா இல்ல தனியார் பள்ளிக்கு தமிழ் வாத்தியார் தேடுறீங்களா?
படையில சேர்ந்து நாலு ஜை ஜம்ப், நாலு லாங் ஜம்ப், நாலு முறை டும் டும்முன்னு சுட்ட உடனே குழுவுல பெரிய ஆள் ஆவுறது.. பின்லேடனை தவிர எல்லாருக்கும் இவரை பத்தி தெரிந்து இருப்பது. கமலை பின்லேடன் சந்திக்கலை சந்திச்சி இருந்தா ஹை காஷ்மீரின்னு சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்பாரு. அவன் அவன் லோக்கல் ரவுடி கேங்குல கேங் லீடரை பாக்கவே தலைகீழ நின்னு தண்ணி குடிக்கிறான்..இவரு சேர்ந்த நாலாவது நாளில் பின்லேடனை பாக்குறாரான் அதுவும் ஒரு Transmitterரோட..ஹுக்கும்.. அல்கொய்தா இயக்கத்தை பத்தி செய்திதாள்களில் வரும் செய்திகளை படிச்சி இருந்தாலே இன்னமும் பெட்டரா திரைக்கதை இயற்றி இருக்கலாம்...
தீவிரவாத/போராளி இயக்கங்கள் அப்படின்னாலே AK 47ஐ கையில தூக்கிட்டு ஓடுறது, கும்பலா நின்னு டும் டும்முன்னு சுடுறது, அப்படிங்கிற பல நூறு வருஷத்துக்கு முந்தைய சிந்தனையில இருந்து கமல் இன்னமும் வெளிய வரவே இல்லை. லோக்கல் ரவுடிங்களே என்ன ஹைடெக்கா இருக்கானுங்க.. உலகத்துக்கே தண்ணி காட்டிட்டு இருக்குற ஒரு இயக்கத்தை காட்டும் பொழுது இவ்வுளவு லோக்கலாவா காட்டுவாங்க.. பின்லேடனை காட்டும் பொழுது அவர் சரக்கு கிளாசோட ஒரு மெத்தையில உக்காந்துட்டு இருக்க சுத்தி நாலு பிகருங்க டேன்ஸ் ஆடுற மாதிரி காட்டிடுவாங்களோன்னு லைட்டா பயந்துட்டேன் நல்ல வேளை அதுமாதிரி எதுவும் நடக்கலை...
ஒரு காட்சியில மேல அமெரிக்க போர் விமானம் பறந்துட்டு இருக்கும் கீழ வெட்ட வெளியில ஜாலியா இவங்க பயிற்சி எடுத்துட்டு இருப்பாங்க.. இவங்க கிட்ட துப்பாக்கி கம்மியா இருக்குன்னு வெச்சிகோங்கன்னு நாலு துப்பாக்கியை போட்டு போயிடுவாங்களோன்னு பயந்துட்டேன்..
இம்சை அரசனோட ஒற்றர் படைக்கு போட்டி அமைப்பா இருக்கும் RAWவுக்கு தெரிந்த விஷயம் கூட FBIக்கு தெரிலையாம்..அதுவும் அவங்க நாட்டில் நடக்கும் ஒரு பேரழிவை பத்தி.. இருந்தாலும் கமலுக்கு இவ்வுளவு காமெடி சென்ஸ் கூடாது..
கமல் சார் கமல் சார் car chaseசீன் உங்களுக்கு புடிக்குமுன்னு எங்களுக்கு தெரியும் அதுக்காக இப்படி படத்துக்கு படம் மொக்கையா கார் சேஸ் சீன் வெச்சி எங்களை கொல்லாதிங்க ப்ளீஸ்..
இந்த வில்லன் கூட செம காமெடி.... வழக்கமான தமிழ் படங்களை மாதிரி மொத்த திட்டத்தையும் கமல் கிட்ட சொல்லிடுவாரு.. எவ்வுளவு பெரிய திட்டம் போடுறான் இவ்ளோ மொக்கையாவா போடுவான். அவனோட கூட்டாளிங்க எல்லாரையும் புடிச்சிட்டாங்க இல்ல அழிச்சிட்டாங்கன்னு தெரியுது. ஆனாலும் தலைவரு சாவுகாசமா காரை புடிச்சி (இதுக்கு நடுவுல ஒரு ப்ளாஷ் பேக் வேற) பிளைட் புடிச்சி, பிளைட் டேக் ஆப் ஆன பின்னாடி டீ காபி எல்லாம் குடிச்சிட்டு (வழியில Airport duty free shopல ரெண்டு full வாங்கிட்டு போயி இருக்கலாம்.) குண்டை வெடிக்க வைக்க பண்ண முயற்சி செய்றாரு..
நியுயார்கில் அணு குண்டுக்கு ஈடான ஒன்றை வெடிக்க வெக்க போறாங்க.. ஹீரோ கோஷ்டியும் சரி வில்லன் கோஷ்டியும் சரி.. பரபரப்பே இல்லாம பப்பரப்பான்னு சுத்துறாங்க.. அதுவும் ஹீரோ கோஷ்டி ஏதோ பேமலி டூர் போற மாதிரி போறாங்க.. கடைசி காட்சி செம காமெடி அந்த அணுகுண்டை வெடிக்காம இருக்க அணு விஞ்ஞானி ஹீரோயினி (நம்ம நாராயணசாமி மாதிரின்னு நெனைக்கேன்).. குண்டுக்கு மேல microoven வெச்சி மூடுது.. இந்த மேட்டர் கூட தெரியாத சப்பை மூக்கனுக்கு புக்குஷிமோவுல எம்முட்டு கஷ்டப்பட்டாங்க.. இவங்களை பெரிய காமெடி அந்த குண்டை வெடிக்க வெக்க இருந்த ஆப்ரிக்கன்.. ஹீரோ கோஷ்டி உள்ள நுழைந்த உடனே ஒரு சவுண்டு என்னாடா சவுண்டுன்னு பாத்தா குக்கர் சவுண்டு.. அந்த ஆப்ரிக்கன் குண்டு வெக்க வந்தானா இல்ல சோறு பொங்க வந்தானா? ப்ளடி தின்னிப்பண்டாரம்..
கமல் தெய்வ பக்தி மிக்க,மனித நேயம் மிக்க உளவாளியாம்.. ஒரு காட்சியில இன்னொரு உளவாளியிடம் உன்னை அவன் பையில இருந்து அந்த transmitterஐ எடுக்க சொன்னேன் இல்ல ஏன் எடுக்கலை பாரு நம்மால அநியாயமா அவன் சாகப்போறான் அல்லா நம்மளை மன்னிக்க மாட்டாருன்னு.. எச்சூஸ்மீ இந்த காட்சிக்கு முன்ன காட்சியில நீங்க வெச்ச transmitterரால எத்தனை குடும்பம் சின்னா பின்னமாச்சே அதுக்கு மட்டும் அல்லா ஆப் பாயில் போட்டு குடுப்பாரா என்ன? கமல்ஜி உங்களுக்கு ஆல்ரெடி தேவையான விளம்பரம் இருக்கு வெய் மோர் விளம்பரம்யா..
ஹாலிவுட் படங்களில் அவங்க திரைக்கதைக்கு குடுக்கும் முக்கியத்துவமும் அதற்கான உழைப்பும் அளப்பறியது. அல்கொய்தா போன்ற இயக்கங்களை பற்றிய விவரங்களை அறிய கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தா இதை விட பெட்டரான திரைப்படத்தை அளித்து இருக்கலாம்..ஹாலிவுட் கலைஞர்களை வெச்சி எடுத்துட்டா மட்டும் படம் ஹாலிவுட் ரேஞ்சாயிடாது..
இரண்டு கதை களங்களில் எதையாச்சும் ஒண்ணை தேர்வு செய்து இருக்கலாம்.. 5 ரூபாய் குடுத்தா 500 ரூபாய்க்கு நடிக்கிற மாதிரி இரண்டையும் காட்ட முயற்சி செய்தது சொதப்பலாயிடிச்சி.. ரெண்டாவது கதை களம் + பிட்சா மாதிரியான ஒரு திரைக்கதை செய்து இருந்தா டக்கரான ஆக்ஷன் திரில்லரா வந்து இருக்கும்.. பெட்டர் லக் நெஸ்ட் டைம்..
Satyamev Jayate நிகழ்ச்சி குறித்து சில எண்ணங்கள்
Wednesday, May 30, 2012அமீர்கான் நடத்தும் இந்நிகழ்ச்சியின் கடந்த வார பகுதியில் மருத்துவ துறையில் நடக்கும் அவலங்களை குறித்து அலசினார்கள். Medical Council of India (MCI)ல புரையோடும் ஊழல்கள், அதன் கையாளாகாதனம் (கடந்த சில வருடங்களா இவங்க எந்த மருத்துவருடைய அங்கீகாரத்தையும் ரத்து செய்யலையாம்.. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி அவரோட 15 வயது மகனை வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவரின் அங்கீகாரம் உட்பட.. நம்மூர் டாக்டருங்க எல்லாம் அம்மூட்டு நல்லவங்க), அதில் இருக்கும் கூட்டணிகள், மருத்துவ துறை சீரழிய முக்கிய காரணங்களான மருத்துவம் படிக்க ஆகும் செலவு, டாக்டர்கள் அடிக்கும் சதவீகித கொள்ளைன்னு சரியான பாதையில் பயணிக்க ஆரம்பிச்ச நிகழ்ச்சி, இறுதியில் மருத்துவ காப்பீடு, Generic Drug அப்படின்னு ஒரு தவறான வழிகாட்டுதலோட முடிந்து விட்டது. அந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட அந்த இரண்டுமே ஏன் சரியான தீர்வாகாதுன்னு சொல்லவே இந்த பதிவு.
மருத்துவ காப்பீடு
உலக நாடுகள் பலவற்றில் இந்த முறை முற்றிலும் தவறானதுன்னு நிரூபனம் ஆயிட்டே வருது. இந்தியா மாதிரியான அபரிதமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது மிகவும் செலவு பிடிக்கும் தீர்வாக அமையும். அதற்கு பதில் காப்பீட்டுக்கு செய்யும் செலவில் ஒரு பகுதியை அரசு மருத்துவ மனைகளுக்கு செய்து, கடுமையான சட்டங்கள் கொண்டு அதன் நிர்வாகத்தை சீர் படுத்தினாலே ஒரு நல்ல பொது சுகாதார முறை கிடைக்கும்.
அமெரிக்கா போன்ற குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளிலேயே காப்பீடு சார்ந்த திட்டம் தோல்வியடைந்து வருகிறது. தோல்வியடைந்த ஒரு திட்டத்தை நாம் ஏன் முன்னெடுக்க வேண்டும்?
Generic Drug உபயோகம்
மருத்துவ நிறுவனங்கள் மருந்தை கண்டுபிடித்த உடன், கண்டுபிடிக்கப்பட்ட வருடத்தில் இருந்து சில வருடங்களுக்கு (அதிக பட்சமாக 10 வருடங்கள்) அந்த மருந்துக்கு காப்பீடு செய்து கொள்ளும். அந்த காப்புரிமை காலம் முடிந்த உடன் அந்த மருந்தை யார் வேண்டுமானாலும் அதே மூலக்கூறுகளை வைத்து தயார் செய்து கொள்ள முடியும். அப்படி தயார் செய்யப்படும் மருந்துகளை தான் Generic Drug அப்படின்னு சொல்றாங்க.
இந்த Generic Drug உபயோகம் இரண்டு காரணங்களினால் நடைமுறைக்கு சரிவராது. முதலாவதா புதிது புதிதாக ஏற்படும் நோய்களுக்கு இந்த முறையில் மருந்துகள் கிடைக்காது. இரண்டாவது மருந்து கம்பெனிகள் ஒரு மருந்தை கண்டுபிடிக்க செலவிடும் தொகை மிக அதிகம். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளில் 10% - 20% தான் மக்களின் பயன்பாட்டுக்கு வெளி வரும்.
அவ்வுளவு செலவு செய்யும் மருந்து கம்பெனி லாபி Generic Drugஐ உபயோகிக்க அவ்வுளவு சுலபமா விடாது. அதற்கு பதில் மருந்த கம்பெனிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையேயான அந்த பிணைப்பை உடைத்து. மருத்துவர்கள் மருந்து கம்பெனிகளிடம் இருந்து நன்கொடைகளை வாங்குவதை தடை செய்தாலே. மருத்துவ செலவில் 20-30% வரை குறையும்.
இந்த நிகழ்ச்சியின் இடையே மருத்துவர்கள் மருந்து கம்பெனிகளிடம் இருந்து நன்கொடை வாங்குவது ஒரு குற்றமாகவே கருத்தப்படவில்லைன்னு சொன்னாங்க.. எவ்வுளவு பெரிய தவறு பாருங்க இது. இதையெல்லாம் மாற்றுவதை விட்டு காப்பீடு, Generic drugன்னு வேற எதை பத்தியோ விவாதம் செய்துட்டாங்க.
இதெல்லாம் நல்லதுக்கு தானா?
Wednesday, March 28, 2012வழக்கமா நாலு உதை விட்டாலும் ஸ்டார்ட் ஆவாத பைக்(பெரும்பாலும் சாவி போட்டு இருக்க மாட்டேன் இல்லாட்டி சாவியை ஆன் பண்ணி இருக்க மாட்டேன் நோ நோ.. இதுக்கெல்லாம் பிளக்ஸ் பேனர் ரோம்ப ஓவர்) இன்னிக்கு ஒரே உதையில ஸ்டார்ட் ஆயிடிச்சி.
ஹோட்டல்ல போயி சட்னி கேட்டா சட்னி இல்ல கிட்னி வேணுமான்னு கேப்பானுங்க.. இன்னிக்குன்னு பாத்து சார் தேங்கா சட்னி,தக்காளி சட்னி, புதினா சட்னி எது வேணுமான்னு கேக்குறாங்க.
பசி உயிரை போவுற அன்னிக்கு நமக்கு முன்னாடி கியூவுல பத்தாயிரம் பேரு நிப்பான் அதுவும் நமக்கு முன்னாடி இருக்குறவனுக்கு கவுண்டர் கிட்ட வந்த அப்புறம் தான் எதை திங்கலாமுன்னு ஆராய்ச்சி செய்யுற ஆசையோ இல்ல இதை எப்படி செய்து இருப்பாங்க அதை எப்படி செய்து இருப்பாங்கன்னு டவுட் வந்து கவுண்டருல இருக்குறவன் கிட்ட கேள்வியா கேட்டு கொலையா கொல்லுவான்.. அதுவும் இல்லாட்டி அவனுக்கு தெரிந்த ஒரு பத்து பேரு வந்து எனக்கு சேத்து வாங்குடான்னு அவன் கிட்ட இருக்குற ஆயிரம் பக்க லிஸ்ட் பத்தாதுன்னு இவனுங்க ஒரு ஆயிர ஆயிட்டம் சொல்லுவானுங்க ஆனா இன்னிக்குன்னு பாத்து எல்லா கவுண்டரும் காலியா இருக்கு வசந்த் & கோ மாதிரி வாங்க வாங்கன்னு வரவேற்ப்பு வேற
வழக்கமா வங்கியில போயி விண்ணப்பம் இல்லைன்னு சொன்னா யோவ் அங்க தான் இருக்கும் போயி ஒழுங்கா பாருயான்னு அன்பா சொல்லுவாரு, ஆனா இன்னிக்கு பாருங்க ஒரு ஆபீசர் பணிவா வந்து பாத்து எடுத்து குடுக்குறாரு. கையெழுத்து போடுற இடத்துல இருந்த மல்லு ஆன்டி என்ன கோர்ஸ் படிக்கிறீங்க, நல்ல கோர்ஸா இருக்கேன்னு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் கடலை போட்டு கஸ்டமர் சேடிஸ்பேக்ஷனை வேற இம்ப்ரூவ் பண்ணுது.
நமக்கு தேவைன்னு வரும் பொழுது.. cartridge காலி ஆவுறது, பேப்பர் தீர்ந்து போவுறது, நடுவுல வேலை செய்யாம போவுறதுன்னு கெத்த காட்டும் பிரிண்டரு இன்னிக்கு பிரிண்ட் பட்டனை தட்டின உடனே சும்மா பள பளன்னு பிரிண்ட் அவுட்டு எடுத்து குடுக்குது.
இதெல்லாம் நல்லதுக்கா இல்ல பெரிய ஆப்போட சின்ன ஆரம்பமான்னு நெனைச்சிட்டே இருந்தா பின்னாடி ஒரு குரல் டேய் எருமை பத்து மணி ஆச்சி ஆபீசுக்கு போவாம அப்படி என்ன தூக்கமுன்னு, ஸ்யப்பா நல்ல வேளை கனவா போச்சி..இந்த மாதிரி பிரச்சனை இல்லாத உலகத்துல பிரச்சனையை fancy banianனா போட்டு பொங்கிட்டு இருக்குற நம்மால உயிர வாழ முடியுமா என்ன?
அரவான் - எலக்கியம் தெரியாத பாமரனின் பார்வையில் :)
Monday, March 05, 2012திரை விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆச்சி.. எப்படி ஆரம்பிக்கிறது... ஒரு நல்ல ஐடியா சொல்லுங்களேன்..டிவியில Retelcast பண்ற பழைய படங்களுக்கு விமர்சனம் எழுதுற மூதேவி உனக்கு எதுக்கு இந்த பில்டப்பு சீனுன்னு கேக்குறீங்களா? சரி சரி எதுனாலும் பேசி தீத்துகலாம்.. இப்படி பப்ளிக்கா பாராட்டாதிங்க. பர்சனல் பஞ்சாயத்துங்களை அப்புறம் பாத்துகலாம் இப்ப விமர்சனத்தை பாக்கலாம்.
படத்தோட கதைக்களம் பண்டைய தமிழகத்தின் தொழில்களான களவும் காவலும். என்னடா திருடன் போலிஸ் கதையான்னு கடுப்பாவாதிங்க.. படத்தோட கதை அதுவல்ல. பசுபதி களவு தொழில் செய்யும் கும்பலை சேர்ந்தவன், ஆதி ஒரு காவல் கூட்டத்தை சேர்ந்தவன். இவங்க ரெண்டு பேரும் ஒரு கட்டத்துல சந்திக்கிறாங்க.. ஆதியோட பிண்ணனி பத்தி எதுவுமே தெரியாம பசுபதி ஆதியின் ஆற்றலை பார்த்து கூட்டத்துல சேத்துகிறாரு.. நோ நோ நீங்க நெனைக்கிற மாதிரி ஆதி அந்த கூட்டத்துல வேவு பாக்க எல்லாம் வரலை (தமிழ் படங்கள் உங்களை எப்படியெல்லாம் ரோசிக்க வெக்குது பாருங்க). ஒரு கட்டத்துல ஆதி பற்றிய உண்மைகள் தெரிய வருது. அந்த உண்மை என்ன அவர் ஏன் களவுக்கூட்டத்துல சேந்தாரு, அதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு தியேட்டருக்கு போயி பாத்து தெரிந்து கொள்ளுங்க.
படத்துல நிறைய சின்ன சின்ன விஷயங்களை நல்லா பண்ணி இருக்காங்க. திருட்டு நகையை வாங்குற செட்டியார் தங்கத்துல செம்பு கலந்து இருக்குன்னு சொல்லி ஏமாற்றுவது, ஊருக்கு வெளிய போயி கேழ்விறகை வாங்கிக்கோன்னு சொல்றது, களவுக்கு போறதுக்கு முன்னாடி போயி துப்பு கேக்குறது, அந்த காலத்து பண்டமாற்று சந்தை முறைகள், அளவீடுகள், நிறைய புதிய தமிழ் சொற்கள், பாளையக்கார்கள், தேவதாசிகளுன்னு பண்டைய மக்களின் குழு வாழ்க்கையை பற்றி ஒரு glimpse அழகா குடுக்குது. ஆதிக்கு அசால்டா காமெடி வருது, படத்துல ஆதி வரிப்புலி பாத்திரத்துக்கு சரியா பொருந்தி வருகிறார் அதே மாதிரி பசுபதியும்.
படத்தோட விஷுவல்ஸ் அசத்தல், காட்சிகள் அவ்ளோ அழகா இருக்கு. அடுத்து பாராட்ட பட வேண்டிய விஷயம் இயக்குனர் தேர்ந்தெடுத்த கதைக்களம் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் பத்தி கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவுது. இதுக்காகவே இயக்குனருக்கு பரிசலோட ராயல் சல்யூட்டுல ஒண்ணை வெக்கலாம். தனியா கேட்டப்ப புடிக்காத பாடல்கள் படத்துடன் பார்க்கும் பொழுது நல்லா இருந்தது. ஆனாலும் இத்தனை பாடல்கள் தேவையில்லை ஒன்றிரண்டு குறைத்து இருக்கலாம்.
படத்தின் குறைகளில் முதலாவது படத்தை அகல உழுது இருக்காங்க, இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டு கமர்ஷியல் விஷயங்களை தளர்த்தி இருந்தா ஒரு அருமையான வரலாற்றுப்படமா வந்து இருக்கும். அடுத்தது சிங்கம்புலி, தயவு செய்து யாராச்சும் அவர்கிட்ட காமெடிங்கிறது ஓலை பாயில ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி நச நசன்னு ஹைபிட்சுல கத்துறது இல்லைன்னு சொல்லுங்கப்பா. இவர் வருகிற ஒவ்வொரு காட்சியும் செம எரிச்சலா வருது. அடுத்த எரிச்சல் வில்லனாக வருகிற (கபீர் பேடி) கொய்யால படம் முழுக்க ஒரே எக்ஸ்பிரஷன் & பார்வை. பசுபதியோட சூப்பர் ஹீரோ பில்டப்பை குறைச்சி இருக்கலாம் ஒரு கிராமமே அவரை நம்பி இருக்குற மாதிரி காட்டுறது ரொம்ப ஓவரு.
முதல் பாதியில் வருகிற களவு காட்சிகள், களவாட போறதுன்னா fair & lovely வாங்க சந்தைக்கு போற மாதிரிங்கிற பீல் வருது. படத்தோட முதல் பகுதியில களவை பற்றி இன்னமும் கொஞ்சம் விளக்கி இரண்டாவது பாதியில் சில காட்சிகளை தவிர்த்து இருந்தா படத்தோட திரைக்கதை தீயா பறந்து இருக்கும். அதே மாதிரி சண்டைக்காட்சிகளும் கிராபிக்ஸ் காட்சிகளும் இன்னமும் கொஞ்சம் மேம்படுத்தி இருக்கலாம்.
படத்துல சில இடங்களில் லாஜிக் இடிச்சாலும், ஆறு தலைமுறையா களவாடவே முடியாத ஊருக்குள்ள அசால்டா போயி களவாடியதும் இல்லாம மாட்டிக்கொண்ட பசுபதியை ஏதோ ஸ்கோல் முடிந்து பிள்ளையை வீட்டுக்கு கூட்டிட்டு வர மாதிரி ஆதி மாடு மேல போயி கூட்டிட்டு வர இடத்துல லாஜிக் மேல மிலிட்டரி டேங்க் ஏறி இறங்குது. பழங்கால தமிழர்களை பத்திய கதையின்னாலே பட்ஜெட்டுல கரிக்கு ஒரு பெரிய தொகை ஒதுக்கிடுவாங்க போல..ஹீரோயினை தவிர்த்து மத்த எல்லாருக்கும் அனல் மின் நிலையத்துக்கே பற்றாக்குறை வருகிற அளவுக்கு கரி அள்ளி பூசி இருக்காங்க.
படம் மரண தண்டனைக்கு எதிரானதுன்னு படிச்சிட்டு இறுதிக்காட்சியில் யாரோ ஒருத்தங்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மரண தண்டனைக்கு எதிரா பக்கம் பக்கமா வசனம் பேசப்போறாங்கன்னு எதிர்ப்பாத்தேன் நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கலை.
சில குறைகள் இருந்தாலும் முதல் பாதியில படத்துதோட மொத்தமா ஒன்றிப்போறோம் அதுவும் படத்தோட காட்சிகளும் வாவ். சில இடங்களையும் காட்சிகளையும் பார்க்கும் பொழுது அடுத்த வீட்ல எவன் இருக்கான்னு கூட தெரியாம அண்டார்டிகாவுல செத்துட்டு இருக்குற சீல்களுக்காக பீல் பண்ணிட்டு இருக்குற கேவலமான இந்த வாழ்க்கையை விட்டு பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பிடலாமுன்னு தோணுது.
ஏழாம் அறிவு, அரவான் போன்ற வரலாற்று படங்களுக்கு திரையரங்குகளில் மக்கள் குடுக்குற ரெஸ்பான்ஸை பாத்தா தமிழ் ரசிகர்கள் ஒரு நல்ல வரலாற்றுப்படத்துக்கு காத்துட்டு இருக்காங்கன்னு தோணுது. ஆங்கிலப்படங்களை போன்ற வரலாற்றுப்படங்கள் கூடிய சிக்கிரம் தமிழில் வரும்,வரணும். ஆனா அதுக்கு ரொம்ப மெனக்கெடணும் அரவான் மாதிரியான படங்கள் இதுக்கு ஒரு நல்ல துவக்கம், மொத்ததுல அரவான் அசத்துரான்.
கூடிய விரைவில் இன்னொரு புதிய படத்தோட (ஹிஹி நெஜமாலுமே புது படமுங்க) விமர்சனத்துடன் உங்களை சந்திக்கும் வரை சந்தோஷங்களுடன் விடைபெறுவது சந்தோஷ்..
விகடனில் எனது பதிவு
Friday, March 02, 2012
5 – 6 வருடங்களுக்கு முன்னாடி என் பதிவை பத்தி தினமலர்ல வந்தது
அப்புறம் ஜுவில ஒரு கட்டுரை எழுதி தரச்சொன்னாங்க, அதெல்லாம் சிறு
பத்தியில வந்தது. அப்பவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. இந்த தடவை ஒரு முழு பக்கம், அதுவும் விகடன் மாதிரியான
ஒரு பாரம்பரிய பத்திரிக்கையில ஒரு பக்கம் முழுவதும் வந்தா எப்படி
இருக்கும், ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி..
பொதுவா ஊர்ல நம்மளை ஒரு பய மதிக்காது இன்னிக்கு காலையில இருந்து ஒரு 5 – 6 பேரு போன் பண்ணி சொல்லி இருக்காங்களாம்.திரும்பவும் பதிவுகளை எழுதலாமுன்னு யோசிக்கிறேன்.. உங்க பேட் டைம்....ஓடுங்க ஓடுங்க இந்த மிருகம் உங்களை நோக்கி தான் வந்துகிட்டே இருக்கு.. சீக்கிரமா ஓடிப்போயி பொழச்சிகோங்க..

விண்ணோடும் முகிலோடும் - Cloud Computing பற்றி தமிழில் பகுதி 2
Wednesday, February 08, 2012
Cloud Computing பற்றிய என்னோட தொடர் அதீதம் இதழில் வெளியாகி வருகிறது.
சென்ற இதழில் முதல் பாகம் வெளியானது இப்ப இரண்டாம் பாகம் வெளியாகி இருக்குது. இந்த பாகத்தில் Virtual Machineஐ பற்றி சிறிய அறிமுகமும், Cloud Computing வகைகளை பற்றியும் சொல்லி இருக்கேன். அதை பற்றி மேலும் படிக்க
இங்கே சொடுக்கவும்.
முதல் பகுதியில் Cloud Computing பற்றி ஒரு எளிய அறிமுகம் குடுத்து இருந்தேன். அதை பற்றி மேலும் படிக்க இங்கே செல்லவும்.
உங்களுக்கு இது குறித்து சந்தேகங்கள் இருந்தா இங்கே பின்னூட்டமாகவோ இல்லை sjsanthose@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலாகவோ அனுப்பலாம்.

விண்ணோடும் முகிலோடும்
Tuesday, January 03, 2012
கணினி உலகை ஆட்டுவிக்க போகும் அடுத்த தொழில் நுட்பமான Cloud Computingஐ பத்தி எழுதணுமுன்னு ரொம்ப நாளா நெனைச்சிட்டு இருந்தேன், அதை ஒரு வழியா எழுதி முடிச்சி அதீதத்துக்கு அனுப்பினா அதை தொடரா போடலாமுன்னு சொன்னாங்க.. அப்படியே அது தொடராவும் வந்துட்டு இருக்கு. அதன் முதல் பாகம் இங்க இருக்கு படிச்சிட்டு உங்க கருத்துக்களை கண்டிப்பா சொல்லுங்க.
வேலாயுதம் - பாக்குறவங்களை கொல்லும் ultimate ஆயுதம்
Thursday, November 03, 2011
இளையதளபதி தன்னோட முந்தைய படங்களில் தமிழ்நாட்ல இருக்குற எல்லா லோக்கல் தாதாக்களை கொன்னுட்டதால, இதுல தன்னோட கடைக்கண் பார்வையை பக்கத்து மாநிலம், பக்கத்து நாட்டுப்பக்கம் திருப்பி இருக்காரு. எப்படியும் இன்னொரு நாலு ஐந்து படங்களில் அவங்களையும் ஒலித்துவிட்டு (சவுண்டு குடுத்து ஒழிக்கிறது) உலக அமைதிக்கான நோபல் பரிசை வாங்கிட்டு, படம் நடிக்கிறதை விட்டுட்டு எப்படியும் பொதுமக்களுக்கு சேவை (சேமியா சேவை இல்ல நல்ல கேப்டன் மாதிரி மக்கள் சேவை) செய்ய களத்துல எறங்கிடுவாருன்னு நெனைக்கிறேன்,
ரைட்டு இப்ப படம் ஸ்டார்ட் ஆயிடிச்சி. மத்த சீனை விடுங்க ஹீரோவோட ஓப்பனிங் சீனுக்கு வாங்க. ஒரு ரயிலு போயிட்டு இருக்கு, கையில ஒரு அருவாளோட ரயிலை விட வேகமா ஒரு ஆளு ஓடுறாரு, யாருன்னு பாக்கமலே நமக்கு அது நம்ம எளையடலபதின்னு ]தெரிஞ்சிடுது. அவரோட ஓட்டத்துக்கு கேமிரா ஈடுகுடுக்க முடியாத காரணத்தினால வேகத்தை கொஞ்சம் குறைக்கிறாரு, அந்த சைக்கிள் கேப்புல ரயிலு முன்னாடி போயிடுது, ஆனா அதையும் அருவா போட்டு டளபதி catch பண்ணிடுறாருங்கிறது வேற விஷயம்.
ஓடுற ரயிலில் ஏறி வழக்கம் போல ரயிலுக்குள்ள இருக்குற ஆயிரக்கணக்கான ரவுடிகளை ரத்தக்களரி ஆக்குவாருன்னு பாத்தா, வெச்சாங்க பாருங்க ஒரு டிவிஸ்டு. அவரு இந்த ஓட்டம் ஓடி ரயிலில் ஏறி ரயிலை நிறுத்தியது அவரோட தங்கச்சிக்கு சீட் போடுறதுக்காமா அது சரி.
ஓபனிங் சீன் செம அதகளமா இருந்தாலும் எனக்கு இதுல ஒரு வருத்தம் தல, போன படங்களில் ராக்கெட்டை விட வேகமா ஓடி பல பல பரிசுகளை வென்ற உங்களை விட கேவலம் ஒரு ரயில் வேகமா போவுற மாதிரி காட்டிடாங்களே. இதுவே நம்ம பேரரசா இருந்தாருன்னு வையுங்க நீங்க ரயிலை விட வேகமா ஓடி ரயிக்கு முன்னாடி போயி உங்க ஒத்த விரலால ரயிலை புடிச்சி நிறுத்துற மாதிரி சீன் வெச்சி இருப்பாரு. சரி பீல் பண்ணாத விடு தல அடுத்த படத்துல ஒளியை விட வேகமா ஓடி ஒலிம்பிக் மெடல் வாங்க இந்தியா பேரை காபாத்தலாம்..
இதுக்கு அப்புறம் ஏகப்பட்ட பில்டப்பு காட்சிகள் (உங்க ரத்தத்துல நேர்மை இருக்கு,கடவுள் கைவுட்டாலும் வேலாயுதம் கைவுட மாட்டான்), ஊரே சுத்தி நின்னு நீங்க நல்லவரு நல்லவருன்னு certificate குடுக்குற சீன், தங்கச்சி செண்டிமெண்டு, குத்தாட்டம், காமெடி பண்ண முயற்சி பண்றதுன்னு, வழக்கமான காட்சிகள் வழக்கத்தை விட மொக்கையா இருந்ததால, படத்தை forward பண்ணிட்டேன் பாத்தா படம் இடைவேளையை தாண்டிடிச்சி.
முதல் பாதி படம் போனதே தெரிலை யப்பா என்னா வேகமான திரைக்கதை. forward பட்டனை தட்ட வேணாம் பாத்தாலே போதும், Playerஏ வெறித்தனமா forward பண்ணுற அளவுக்கு வேகமான திரைக்கதை அமைக்க நம்ம Remake ராஜாவால தான் பண்ண முடியும். முதல் பாதியை விட ரெண்டாவது பாதியில் திரைக்தை அசுர வேகம், பத்தே நிமிஷத்துல forward பண்ணி பாத்துட்டேன்னா பாத்துகோங்களேன்.
இந்த படத்துல எனக்கு புடிச்ச வசனம் சந்தானத்தை பாத்து டலபதி சொல்லுவாரு பாருங்க “நீ திருடறாதுக்கு லாய்க்கே இல்லாத திருடன்.அவன் அவன் தகுதி,திறமை என்னான்னு தெரிந்து அதுக்கு தகுந்த வேலைகளை பாக்கணும்” அது தாங்க. இதுல சோகம் என்னானா டளபதிக்கே அந்த வசனம் பிட் ஆவுதுறது தான். ”ங்ண்ணா உங்களுக்கும் நடிப்புக்கும் ரொம்ப தொலைவுங்கண்ணா, நடிப்பு பாவங்கண்ணா அதை விட்டுடுங்கண்ணா. ரஜினி மாதிரி பத்து பேரை கூட சேத்துட்டு தனக்கு தானே பில்டப்பு குடுத்துகுறது, டி.ஆர் மாதிரி தொங்கச்சி தொங்கச்சின்னு தங்கச்சின்னு செண்டிமெண்டு போடுறது, எம்.ஜிஆருன்னு நெனைச்சிட்டு திரையை பாத்து ரத்தத்தின் ரத்தமேன்னு பாட்டு பாடுறது, சீட்டு கம்பெனியில விட்ட காசை திரும்ப வாங்கி தரது மாதிரியான சீனுங்களை அவங்க நடிச்சாலே நாங்க பாக்க மாட்டோம் உங்களுக்கு ஏதுக்குங்கண்ணா இந்த வேண்டாத வேலை எல்லாம். உங்களுக்கு என்னா தெர்தோ அதை பாருங்கண்ணா படத்துல நடிக்கிறதை விட்டுங்கண்ணா.முக்கியமா காமெடி பண்ணுறேன்னு குழஞ்சி குழஞ்சி ஏதோ பண்ணறீங்க பாருங்க அதை மொதல்ல நிறுத்துங்கண்ணா”
போன படத்துல டளபதி அறுந்த accelator வயரை வாயில கவ்விட்டே கார் பந்தயத்துல ஜெயிச்ச மாதிரி இந்த படத்துல பிரேக் புடிச்சி ரயிலை நிறுத்தி சென்னைக்கும் உங்க வருங்கால சந்ததிக்கும் ஏற்பட இருந்த மிகப்பெரிய ஆபத்தை தடுத்துடுறாரு. இது மாதிரி நிறைய மயிர் கூச்செரியும் காட்சிகள் இருந்து இருக்கலாம் நான் forward பண்ணி பாத்தால எனக்கு தெரிலை உயிர் மேல பயம் இல்லதவங்க மொத்த படத்தையும் பாத்துட்டு உயிரோட இருந்தா சொல்லுங்க பதிவுல ஏத்திடுறேன். வழக்கமா இவர் படங்களில் பாட்டு நல்லா இருக்கும் இதுல அதுவும் இல்ல. ஹீரோயின் பத்தி கேக்கவே வேணா வழக்கம் போல உலகத்துல இருக்குற ஒரே ஒரு ஆம்பளையான டளபதியை ரெண்டு ஹீரோயினும் துரத்தி துரத்தி லவ் பண்றாங்க.
படத்துல நல்ல விஷயமே இல்லையாண்ணு கேக்குற பாஸிடிவ் பத்மநாபர்களுக்கு சந்தானம் ஜோக்ஸ் நல்லா இருக்கு, டளபதி இதுல எனக்கு தெரிந்து ஒரே ஒரு பஞ்சி டயலாக் தான் பேசுறாரு.
படத்தோட ஹைலைட்டே இறுதிகாட்சிகளில் டளபதியோட SixPack சீன் தான் யப்பா “What a Body Man". படம் பாத்துட்டு இருந்த எங்க பாட்டி.. ”ஏண்டாப்பா விஜய்க்கு உடம்புகிடம்பு சரியில்லையா ஏன் வயிறு எல்லாம் சுருக்கம் சுருக்கமா இருக்குன்னு கேக்குறாங்க”. விடு தல அவங்களை வாசன் eye careல சரி பண்ணிடலாம். நீங்க அதுக்குள்ள இன்னும் ரெண்டு சுருக்கங்களை சாரி packsஐ ரெடி பண்ணி உலகத்துலேயே 8 பேக் கொண்ட ஒரே நடிகராயிடுங்க.
இதுக்கு மேல விஜய்யோட கருத்தழகு மிக்க படங்களுக்கு கதை எழுத தனியா டைரக்டர் வேணாம் ஒரு மென்பொருளே போதுமுன்னு முடிவு பண்ணி யாரோ ஒரு புண்ணியவான் மென் பொருள் எழுதியிருக்காரு இதுக்கு மேல அவர் அதையே யூஸ் பண்ணிகலாம்.
நம்ம பஞ்சி (நன்றி ராஜன் லீக்ஸ்)
“சாதாரணமா உங்க படமுன்னாலே நாங்க ஓட்டுவோம் நீங்க இந்த மாதிரி ஒரு மொக்கை படத்தை எடுத்துட்டு ஓட்டு ஓட்டுண்ணா எப்படிங்கண்ணா.

காஞ்சனா - Hats Off
Monday, August 08, 2011
ஒண்ணு மெசேஜ் சொல்லுறேன்னு படம் முழுக்க அட்வைஸ் மழையா பொழிந்து வருவியா வருவியான்னு கொல்லுவாங்க இல்லாட்டி பேய் படம் எடுக்குறேன் பேர்விழின்னு தியேட்டர் ஆப்ரேட்டர் வரைக்கும் முகத்தை சீரியஸா வெச்சி அதுக்கு லைட் அடிச்சி கொல்லுவாங்க. சேரனோட பொற்காலம் படத்தை பாத்ததும் அட இப்படி கூட மெசேஜ் சொல்ல முடியுமான்னு தோணிச்சி அப்புறம் சங்கரின் ஈரம், அனந்த புரத்து வீடு போன்ற படங்களில் நடிக்கிறவங்க அவங்க மொகத்தை வெரப்பா வெக்காம அவங்க முகத்துல டார்ச் அடிக்காம கூட பேய் படம் எடுக்க முடியுமுன்னு காட்டினாங்க.
இதுல லாரன்ஸ் ஒரு படி மேல போயி ஒரு திரில்லர் படத்துல சிரிக்க வெச்சிட்டு மெசேஜும் சொல்லியிருக்காரு. படம் ஆரம்பத்தில் இருந்து காமெடி பட்டய கிளப்புது. அதுலையும் கோவை சரளா கலக்கல்.
ஆடி அமாவாசை அன்னிக்கு பேய் படத்துக்கு தெரியாம வந்துட்டோமோன்னு பயப்படும் அளவுக்கு இடைவேளை வரை பேயின் உருவத்தை பார்க்கும் வரை பயம் காட்டுறாங்க. அந்த பிளாஷ் பேக்குக்கு அப்புறம் நமக்கு பயமே இல்ல.அதுலையும் லாரன்ஸ் அந்த மூணு கதா பாத்திரமா நடிக்கும் பொழுது பின்னி பெடல் எடுக்குறாரு. கிராபிக்ஸ் இன்னமும் கொஞ்சம் நல்லா செய்து இருக்கலாம்.
எனக்கு படத்துல புடிச்ச சீன் அந்த Climax.சாமியை கண்டா பேய்க்கு பயம் அப்படின்னு traditional கண்ணோட்டத்தை விட்டு அட இப்படி இருந்தா நல்லா இருக்குமேன்னு நாம நினைக்கிற மாதிரி நல்லா பண்ணி இருக்காங்க..அந்த Climax பாட்டுல அடுறது யாரு ஆண்ட்ரியா மாதிரி இருந்தது?
படத்துல பாராட்ட பட வேண்டிய இன்னொரு நபர் சரத். நல்லா பண்ணி இருக்காரு ஆனா படத்தோட போஸ்டரிலோ அல்லது மற்ற promoக்களிலோ அவரையோ இல்ல அவரோட பேரையோ பாக்கலை. படத்துல பாராட்டபட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு முக்கியமா மாற்றுத்திறனாளிகளின் நடனம் class.
படத்தை நேத்து பாத்துட்டு இன்னிக்கு அவங்க promoவை டிவியில பாக்குறேன் மனுஷன் இது எல்லாமே கடவுளோட செயல் டீம் வொர்க் அப்படிங்கிறாரு, சுமனை புகழ்றாரு, கோவை சரளாவை புகழ்றாரே தவிர. சீன் பை சீன் காபி அடிச்சிட்டு இந்த படத்துக்காக மூணு மாசமா கொழந்தையோட வாழ்ந்தேங்கிற போலீஸ்காரனோட ஜீப்புல போனேங்கிற மாதிரி பில்டப்பே இல்ல.
படத்துக்கு பாடல்கள் ஒரு மிகப்பெரிய குறை படத்தோட ஓட்டத்தை ரொம்ப தடை படுத்துது. மத்தபடி லாரன்ஸோட பேய் பயம் இதுல கொஞ்சம் ஓவரா இருக்கு அடுத்த பகுதியில் அதை தவிர்த்தால் நல்லா இருக்கும். ஒவராலா ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் ரசிச்ச படம் கண்டிப்பா குடும்பத்தோட போயி பாக்கலாம்.

உதவி செய்யலாமே...
Tuesday, July 26, 2011
எத்தனையோ தினச்செய்திகள் பரபரப்பாக வந்துசென்றாலும் அவற்றில் ஒருசில செய்திகளே நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்படித்தான், நேற்று வலைப்பூவில் ராஜ் தொலைக்காட்சி செய்தி குறித்த ஓர் பதிவை வாசித்தபிறகு அன்றிரவு தூக்கம் தொலைந்தது! செய்தியொன்றும் பரபரப்பானது அல்ல. ஆனால் ஏனோ தெரியவில்லை அதை வாசித்த பிறகு எப்படியாவது உதவமுடியுமா?என்ற எண்ண ஓட்டம் மனதை அலைக்கழித்தது. செய்தி என்னவென்றால்,
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(50). இவரது மனைவி லெட்சுமி(45). விவசாய கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, ராஜவேல்(17), என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.
ராஜவேல் சிறுகடம்பூர் கிராமத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில், 470 மதிப்பெண் பெற்று, பள்ளியில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். கூலித் தொழிலாளியின் மகனான ராஜவேல், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, வேறுபள்ளியில் படிக்க வைத்தால், +2வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார் என பள்ளி ஆசிரியர்களும், மாணவனின் உறவினர்களும் கூறியதையடுத்து தங்கவேல், சிறுகடம்பூரில் இருந்த தனது வீட்டை விற்று, சேலம் மாவட்டம் வீரகனூரில் உள்ள ராகவேந்திரா பள்ளியில் மகனைச் சேர்த்து படிக்க வைத்தார். தற்போது செந்துறையில் உள்ள நமச்சிவாயம் என்பவரது வயலில், ஒரு கொட்டகையில் குடியிருந்து, விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
ராகவேந்திரா பள்ளியில், +2 படித்த ராஜவேல் 1200க்கு 1,171 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பெற்றார். கூலித்தொழிலாளியின் மகனான ராஜவேலின் ஏழ்மை நிலையை அறிந்த ராகவேந்திரா பள்ளி நிர்வாகம், அவரது மருத்துவ பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்களைப் பெற்று, சொந்த செலவில் மருத்துவ கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். கவுன்சிலிங்கில் 198.5 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்ற அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
ஆனால் அவரின் ஏழ்மை மருத்துவக்கல்லூரியில் சேரவிடாமல் அவரைத் துரத்துகிறது. மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல், ராஜவேலுவின் தந்தை தங்கவேலு தவித்து வருகிறார். மகனுடைய +2 படிப்புக்காக, வீட்டை விற்று விட்டு, விவசாய நிலத்தில் குடியிருந்து வரும் தங்கவேலு, மகனின் டாக்டர் பட்டப் படிப்புக்குப் பணம் கட்ட வழியின்றி திணறி வருகிறார். அதனால், தற்போது தங்கவேலுக்கு உதவியாக, ராஜவேலுவும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இதுகுறித்த செய்தி ராஜ் தொலைக்காட்சியில் வெளியாகி, அதை எங்களூர் வலைத்தளப் பதிவொன்றில் வெளியிட்டுள்ளார்கள்.
தேசியளவில் 16 வயதுடைய அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கட்டாயக் கல்வி திட்டம் ஒருபக்கம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் கல்விக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனினும், இவை எல்லாம் தொடக்க நிலையிலிருந்து குறிப்பிட்ட வகுப்புகள்வரை மட்டுமே கண்காணிக்கப்பட்டு வருகின்றன.கல்விக்கண் திறந்து கொண்டு எதிர்காலத்தில் பொறியாளராகவோ மருத்துவராகவோ வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என்ற பலரது கனவுகள் SSLC, +2 தேர்வுகளுக்குப்பிறகு கானல்நீராக கலைவதற்குப் பின்னணியில் ஏழ்மையும் குடும்பச்சுமையும் உள்ளன!
மகனின் படிப்பாக வசித்த வீட்டை விற்றபின்னரும் மேல்படிப்புக்குச் செலவளிக்க வழியற்ற ஏழைகள் இருக்கும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது யார்மீதோ கோபம் வந்தாலும், அது யாரென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அலப்பரை செய்யும் அரசியல்வாதிகள், பல உயிர்களைக் காப்பாற்றும் சாத்தியமுள்ள ராஜவேலு போன்ற ஏழை பாரத ரத்னாக்களை அடையாளம் கண்டு உதவினால் புண்ணியமாகப் போகுமே!
இந்த மாணவனின் மேற்படிப்புக்கு உதவக்கோரி அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்தச் செய்தியை உங்கள் தளத்தில் வெளியிட்டு, பாரத தேசத்திற்கு மேலும் ஒரு மருத்துவர் கிடைக்க உதவலாமே!
இச்செய்தியை சகவலைப்பதிவர்கள் தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டு அரசின் கவனத்திற்க்கு கொண்டு செல்லலாமே..
நன்றி: இந்நேரம்.காம்
இது பற்றி மேலும் விவரம் அறிய தங்கவேலுவின் மொபைல்போன் எண் 95852 68053க்கு தொடர்பு கொள்ளலாம்.

உங்களுக்கு தம்பியோ,தங்கச்சியோ இல்லைன்னு வருத்தமா?
Wednesday, July 20, 2011
வாழ்க்கையில என்ன இருந்து என்னா ஆவப்போவுது ஒரு தம்பி தங்கச்சி இல்லம போயிடிசே, எனக்கு இருக்குற திறமைக்கு என் கிட்ட ஒரு பிள்ளையை குடுத்து பாரு நான் வழிகாட்டியா இருந்து எப்படி பெரிய ஆள் ஆக்குறேன்னு” என்று நினைப்பவரா? அப்ப நீங்க போக வேண்டிய இடம் “வாழை”.
நாம வாழ்க்கையில இந்த அளவு உயர்ந்து இருக்க என்ன காரணமுன்னு யோசிச்சி பாத்தா யாராச்சும் ஒருத்தர் நம்மளை நம்ம வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துலையும் ’இது பண்ணு தம்பி இதை படி தம்பி’ன்னு வழி நடத்தி இருப்பாரு. இந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை.
வாழையின் நோக்கமே அந்த மாதிரியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியா ஒருவரை நியமனம் செய்வதே.. அட இந்த டீலிங் நல்லா இருக்கே, வாழையில நான் என்ன பண்ணலாமுன்னு கேக்கறீங்களா? அப்ப கீழ இருக்குற மேட்டரை படிங்க.
வாழையில் இருக்கும் நண்பர்களை மூன்று விதமாக பிரிக்கலாம், வழிகாட்டிகள், தொண்டர்கள் மற்றும் நன்கொடையாளர்கள்.
வாழையில் வழிகாட்டியாக விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு தம்பி/ward அளிக்கப்படுவார். என்னாடா இது.. வழிகாட்டி, Mentor, கிண்டாருன்னெல்லாம் சொல்றாங்களே இதுக்கு பெரிய அப்பாடக்கரா இருக்கணும் போலயேன்னு நெனைச்சி பயந்துடாதீங்க. உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா நீங்க என்ன பண்ணுவிங்க?அடிக்கடி போன் போட்டு பேசுவீங்க, போயி பாப்பிங்க, இதை பண்ணுடா அதை பண்ணுடான்னு சொல்லுவிங்க இல்லயா.. அந்த வேலயத்தான் நீங்க இங்க செய்யப்போறீங்க. வாழைக்கு பெண் வழிகாட்டிகள்/Mentorகள் நிறைய தேவைப்படுகிறார்கள்.
தொண்டர்கள் வாழைக்கு தேவையான அலுவலக ரீதியான பணிகள் அப்புறம் த்த இன்ன பிற வேலைங்க இருக்கும் இல்ல அதுல உதவலாம்.
நன்கொடையாளர்களை பத்தி பெருசா விளக்கம் தேவையில்லைன்னு நெனைக்கிறேன்.
இது பற்றி மேலும் விவரம் அறியவும், வாழையோடு இணைந்துகொள்ளவும் 24 ஜுலை 2011 அன்னிக்கு சென்னையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நிகழவிருக்கும் வாழையின் ஒரு அறிமுக நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ளுங்கள்.
IEEE Madras Section, (Opp. to Anna Centenary Library)
25, Gandhi Mandapam Road, Kotturpuram
Chennai, Tamil Nadu
இது பற்றிய மேலும் விவரம் அறிய Kalyanஐ அணுகவும் (9952992454)
வாழையின் Facebook முகவரி. http://www.facebook.com/event.php?eid=213560722021121
வாழையின் இணையதள முகவரி http://www.vazhai.org/
வேற எதாச்சும் விவரம் வேண்டுமானாலும் என்னை கேளுங்க..

பதிவரின் மருத்துவ உதவிக்காக நர்சிம்மிடம் பணம் கொடுத்தவர்கள்
Wednesday, April 20, 2011
ஒரு பதிவரின் மருத்துவ செலவுகு பதிவர் நர்சிம் முன்னின்று நிறைய பதிவர்கள் மற்றும் வாசகர்களிடம் பணம் சேகரித்தார். நர்சிமிடம் இருந்து அந்த பணத்தை மிகப்பெரிய போராட்டத்துக்கு பிறகே பெற முடிந்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்து இருக்கும்..அத்துடன் பிரச்சனை முடிந்தது என்று பார்த்தால் நிறைய பதிவர்கள் அளித்த பணம் உரியவர்களிடம் சேர்ப்பிக்கபடவில்லை என்று தெரிகிறது. அவரிடம் இருந்து சரியான கணக்கை பெற முடியும் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால். பணம் குடுத்தவர்களிடம் இருந்தே அதை சரிபார்க்கும் முயற்சி தான் இந்த பதிவு.
இந்த பதிவை முடிந்த அளவுக்கு ரீஷேர் செய்யுங்க..உங்களுக்கு தெரிந்த விவரங்களை விருப்பம் இருந்தால் பகிரவும்.
தயவு செய்து நர்சிம்மிடம் பணம் குடுத்தவர்கள் சிரமம் பார்க்காமல் கீழே கேட்க்கப்பட்டுள்ள விவரங்களை இந்த பதிவின் பின்னூட்டமாக அளிக்கவும்.
அப்படி பின்னூட்டம் இடவும் விருப்பம் இல்லாவிட்டால் singainathannarsim@gmail.com முகவரிக்கு மெயில் அனுப்பலாம்..
பெயர் (அதை வெளியிட வேண்டாம் என்றால் கண்டிப்பாக வெளியிடப்படாது)
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் (அளிக்க விருப்பம் இருந்தால்)
நர்சிமிடம் அவர்கள் அளித்த தொகை
எந்த வழியாக பணம் குடுத்திங்க அப்படிங்கிற விவரம் (Cash/Cheque/Account Transfer)

சென்னை பல்கலைக்கழகம் DDE Equiry
Saturday, April 09, 2011
Madras University பெண்களூரு கிளைக்கு போன் பண்ணா இருக்குற பன்னாடைங்களுக்கு இங்கிலீபீசு கொத்தில்லா. மீறி பேசினா அரை குறையா பதிலை சொல்லி போனை வெச்சிடுறாங்க இல்ல நீங்க நேர்ல வாங்கன்னு சொல்றாங்களேன்னு நம்ம சிங்காரச்சென்னைக்கு போன் பண்ணா..
நான் : சார் மெட்ராஸ் யூனிவர்சிடி equiryங்களா?
eq : ஆமாம் இன்னா வோணும்
நான்: (லைட்டா டரியலாகி) BSc Psychology குறிச்சி கொஞ்சம் விவரம் வேணும்
eq: இன்னா வெவரம் வோணும்..ஒனக்கு
நான்: பெண்களூருல இருந்து பேசுறேன் இந்த contact class எல்லாம் நடக்குமா ஒழுங்கா.
eq: ஆ அதெல்லாம் நடக்கும் நடக்கும்...
நான்: application last date எப்ப
eq: அதெல்லாம் முடிஞ்சிச்சே நீ இன்னா பண்ற இன்னிக்கு அங்க போயி அப்லிகெஷன் பில்லப்பண்ணிடு.
நான்: அப்லிகேஷனோட என்ன எல்லாம் attach பண்ணி அனுப்பணும்..
eq: போறப்போ SSLC HSC certificates original + xerox எடுத்துனு போ...
நான்: அதெல்லாம் வீட்ல இருக்கே...
eq: என்னாது வூட்ல இருக்கா சரி இந்த மாச கடசி வரைக்கும் டைம் இருக்கு வூட்ல இருந்து எடுத்துட்டு வந்து சேந்துக்கோ..
கொய்யால நல்லா நடத்துறாங்கய்யா யூனிவர்சிடியை..இது சத்தியமா நடந்த உண்மை உண்மையை தவிர வேற எதுவும் இல்லை.

வருட இறுதியில் வரும் டெம்ப்ளேட் பதிவுகள்
Friday, December 31, 2010
ஒரு நாள் நட்சத்திரம் வந்தா இந்த டெம்பளேட் பதிவருங்க குதுகலமாயிடுவாங்க. பொதுவா இவங்க பதிவுகளை வகைப்படுத்திடலாம் அதிலும் முக்கியமா வருஷக்கடசிக்கு கீழ நான் சொல்லியிருக்குற மாதிரி பொரும்பாலும் பதிவு போடுவாங்க.
1. வாழ்த்துப்பதிவு - என்னாவோ இவங்க வாழ்த்தாட்டி புத்தாண்டு வராத மாதிரி வாழ்த்தோ வாழ்த்துன்னு வாழ்த்துவாங்க.சாதாரண வாழ்த்துப்பதிவை கூட தாங்கலாம் இந்த கவிஜருங்க எழுதுவாங்க பாருங்க ஆவ்வ்வ்வ்வ்வ்..
2. சபத்தப்பதிவு - தினமும் ஒரு தடவை குளிப்பேன், கக்கா வரும்பொழுது அடக்காம போவேன், என்னுடைய வாசகர்களை ஏமாத்தாம தினமும் பதிவு போடுவேன், செத்து போன ஆயா சத்தியமா தம், தண்ணி அடிக்க மாட்டேன் வகையரா.
3. மன்னிப்பு பதிவுகள் - போன வாரம் உங்க பிகரை சைட் அடிச்சிட்டேன் மன்னிச்சிகோங்க, உங்க பதிவுக்கு பத்து தடவை வந்து ஐந்து தடவை தான் பின்னூட்டம் போட்டேன், பிப்ரவரி மாசம் 28 நாட்களே இருப்பதால என்னால 28 பதிவுகளே போட முடிந்தது உங்களுக்கு சரியான வாசிப்பு அனுபவம் குடுக்க முடியலை மன்னிச்சிகோங்க வகையரா.
4. டாப் டென் பதிவுகள் - போன வருஷம் எழுதிய பத்து பதிவுகளில் டாப் 10 பதிவுகள், பார்த்த பதிவுகளில் டாப் 10, போட்ட சண்டைகளில் டாப் டென்னுன்னு போவும்.
5. பீலிங்கஸ் பதிவுகள் - விடை கொடு என் தன் நாடேன்னு ஓவர் பீலிங்கஸோட...ஒண்ணு இதை செய்தே அதை செய்தேன்னு சொல்லுவாங்க இல்ல அய்யோ போச்சே போச்சே போன வருஷம் இதை செய்யலையேன்னு ஒப்பாரி வெப்பாங்க.
6. பொங்கல் பதிவுகள் - நல்ல நாளும் கிழமையும் வந்துட்டா இவங்க பொங்கல் குண்டாவோட வந்துடுவாங்க. தானும் சந்தோஷமா இருக்க மாட்டாங்க அடுத்தவன் சந்தோஷமா இருக்குறதையும் பொறுக்க மாட்டாங்க. பொதுவா இவங்களை டோலர்ஸுன்னு கூப்பிடுவாங்க. இவங்க ஸ்டைலே தனி எவனையாச்சும் புடிச்சி அசிங்க அசிங்கமா திட்டி நடு நடுவே மறுகாலணியாதிக்கம் அந்நிய ஆதிக்கம் அப்படின்னு போட்டுட்டா நெய் முந்திரியோட பொங்கல் சே பதிவு ரெடி.
7. திறனாய்வு பதிவுகள் - கடந்த வருடத்தை திரும்பி பாக்குறேன் நேர் கோட்டில் பாக்குறேன் சைடு கோட்டில் பாக்குறேன்னு கிளம்பி ஏதாவது ஒரு angleல பாத்து எதையாவது சொல்லுவாங்க.
எனக்கு தெரிந்த வகையராக்களை சொல்லியிருக்கேன் உங்களுக்கு தெரிந்து வேற எதாச்சும் இருந்தா சொல்லுங்க.

நந்தலாலா கிகுஜீரோவோவின் அப்பட்டமான காபி ஏன்?
Saturday, November 27, 2010
நந்தலாலா படத்தை அன்பின் பைகா முதல் கொண்டு நிறைய பேர் கிகுஜீரோவு என்கிற ஜப்பான் படத்தின் அப்பட்டமானா காப்பின்னு சொல்லி அதுக்கான காரணங்களாக சில விஷயங்களை சொல்லி இருக்காங்க..நான் கூட முதலில் கடுப்பானேன். அப்புறம் மல்லாக்க ஒக்காந்து யோசிச்சதுல எவ்வுளவு பெரிய மாற்று சிந்தனையை புரிந்துகொள்ளாமல் மறுத்ததோடில்லாம கடுப்பு ஆனதை எண்ணி திரும்பவும் கடுப்பானேன் .
அவர்கள் பாணியிலேயே யோசிச்சி பார்த்ததில், எவ்வுளவு விஷயங்களை மிஷிகன் அந்த ஜப்பானிய படத்தி இருந்து திருடி அவர் படத்துல உபயோகப்படுத்தி தெரிந்தது. எனக்கு தெரிந்த சிலவற்றை கீழே சொல்லி இருக்கேன் பாருங்க.
#கிகுஜீரோவையும் படமுன்னு தான் சொல்லுறாங்க நந்தலாலாவையும் படமுன்னு தான் மிஷிகன் சொல்லுறாரு. அந்த உலகப்படம் எங்கே இது எங்கே இரண்டுக்கும் ஒரே சொல்லாடலை கையாடலாமா?
# எப்பேர்பட்ட உலக படமான கிகுஜீரோவை எடுத்தவரும் டைரக்டர் தானாம் அதைப்பாத்து ஆப்ட்ரால் ஒரு தமிழ் படம் எடுத்த மிஷிகனும் தன்னை டைரக்டருன்னு சொல்லிக்கிறாரு அய்யகோ இந்த கொடுமையை கேக்க ஆள் இல்லையா?
#கிகுஜீரோவையும் கேமிராவுல பிலிம் போட்டு எடுத்தாங்களாம் என்ன தைரியம் மிஷிகனுக்கு, இதையும் அப்படி எடுத்துட்டு ஒரு நன்றி கூட போடல.
# உலகப்புகழ் பெற்ற கிகுஜீரோவை தியேட்டரில் திரையிட்ட சிந்தனையை மிஷிகன் வெக்கமே இல்லாம திருடி நந்தலாலாவையும் தியேட்டரில் திரையிட்டு இருக்காரு. இதுக்காச்சும் ஒரு நன்றி கார்டு போட்டு இருக்கலாம்.
#கிகுஜீரோவுல பசங்க எல்லாம் சட்டை பேண்ட் போட்டுட்டு வராங்க கொடுமையை பாருங்க இந்த படத்துலையை அப்படியே செய்து இருக்காரு மிஷிகன் (நன்றி சென்ஷி.. இல்லாட்டி இதுக்கும் பஸ் விடுவாங்க)
#கிகுஜீரோவு படத்துக்கு போஸ்டரெல்லாம் அடிச்சி சப்பான் புல்லா ஒட்டினாங்களாம சே மிஷிகனும் அதையே செய்து இருக்காரு.
#கிகுஜீரோவு படத்தை பாக்குறதுக்கும் சப்பான் காசு வாங்கிட்டு டிக்கெட் குடுத்து இருக்காங்க பாருங்க இதுக்கும் அப்படியேவாம். ஆனா மிஷிகனுக்கு என்னா தைரியம் பாருங்க சப்பான் படத்தை திருடிட்டு சப்பான் காசை குடுத்தா இந்த படத்துக்கு டிக்கெட் குடுக்க மாட்டேங்கிறாரு.
#கிகுஜீரோவு படத்தோட திரைக்கதையையும் screen playன்னு தான் சொல்லி இருக்காங்க, மிஷிகனின் பேட்டியில் கூட அவர் படத்தின் திரைக்கதையை பத்தி சொல்லும் பொழுது லஜ்ஜையின்றி அதே சொல்லாடலை தான் பயன்படுத்தி இருக்காரு.
இப்ப உங்களுக்கு புரிந்து இருக்குமே ஏன் நந்தலாலா ஒரு அப்பட்டமான காப்பின்னு.என்னோட சிந்தனைக்கு எட்டாமல் இன்னமும் நிறைய விஷயங்களை மிஷிகன் காப்பி அடிச்சி இருப்பாரு உங்களுக்கு அப்படி ஏதுனாச்சும் தெரிந்தால் எழுதுங்க. முக்கியமா அண்ணன் பைகா மாதிரியும் என்னைய மாதிரியும் ரெண்டு படங்களையும் பாக்காம எழுதுவது சாலச்சிறந்தது.
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் படத்தோட காபியை காபின்னு தான் சொல்லணுமா பின்னவினத்துவமா டீ, ஹார்லிக்ஸ், பூஸ்டுன்னு சொல்லக்கூடாதா?
எப்பவாச்சும் பதிவு எழுதுற இந்த வலைதளத்துக்கு 103 பாலோயர்களையும் பதிவே எழுதாத இந்த வலைதளத்துக்கு 4 பாலோயர்களையும் (அதுல ஒண்ணு நானாக்கும்) வாரி வாரி வழங்கிய தமிழ் கூறம் பதிவுலகத்துக்கு நன்றி நன்றி நன்றி.அப்புறம் இந்த பதிவு 301ஆவது பதிவுன்னு பிளாக்கர் சொல்லுது (இதுக்கு நாலு பேரு வாழ்த்துக்கள் சொல்லுவாங்க பின்னூட்டமாச்சும் தேறும்). உன் பதிவை படிக்கிறதே ஒரு கொடுமை அதுல ஓட்டு வேற போடணுமான்னு நீங்க திட்டுறது கேக்குது அதனால சும்மா போறேன்.

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா?
Friday, October 08, 2010
உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.
CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள Excel Formஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.
முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..
பொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேக்க மாட்டேன். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.
மேலும் விவரங்களுக்கு இங்க சுட்டுங்க

வரலாறு முக்கியம் அமைச்சரே
Wednesday, September 01, 2010
பொதுவா வரலாறு முக்கியமுன்னு அறிஞர்கள் சொல்லுவாங்க. அதுலையும் என்னைய மாதிரி ஆளுங்களோட வரலாறு ரொம்ப முக்கியமுங்கிறதை அறிந்து என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த அமுதா மேடத்திற்கு நன்றி.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
சந்தோஷ் = Santhosh என்னடா இது வித்தியாசமா இருக்கேன்னு பாக்காதிங்க.ஆங்கிலமும் தமிழும் சரி சமமுங்கிற உன்னதமான தத்துவத்தை உலகுக்கு உணர்த்த என்னா செய்யுறதுன்னு குப்புறகா படுத்து யோசித்துல உதிச்ச ஜடியா இது (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு பாரு).
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
எல்லாரும் என்னைய அப்படி தான் கூப்பிடுறாங்க அதுக்கு நான் திரும்பி வேற பாக்குறேனா சோ அதான் என் பேரா இருக்க வாய்ப்புக்கள் அதிகம். ரொம்ப தெரிஞ்சவங்களும், ரசிகர்களும், தொண்டர்களும் டிசைன் டிசைனா வேற வேற மாதிரி கூப்பிடுவாங்க அதையெல்லாம் பப்ளிக்ல யூஸ் பண்ண முடியாத காரணத்திலான் அந்த பேரையே யூஸ் பண்ணிகிட்டேன்.
3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....
2005ஆம் வருஷம் ஆகஸ்டு 24ஆம் தேதி வாக்குல, ஆரம்பிச்சதுங்க பிளாக்கருக்கு சனி.அதைப்பத்தி வெளாவரியா இங்க போட்டு இருக்கேன் பாருங்க. இந்த பதிவை படிக்குறதே பெருசு இதுல சுட்டி வேறையான்னு சின்னபுள்ளத்தனமா சிந்திக்காம வரலாற்றை போயி படிங்க
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
நம்ம புகழ் அகில ஒலகத்துலையும் பரவி கெடக்குறதால தனியா advertise எல்லாம் பண்றது இல்லிங்க (வேணா துப்புறது ரொம்ப கெட்ட பழக்கம்).என்னோட Chat Status, இப்ப புதுசா கூகுள் பஸ்ஸுல டிக்கெட் வாங்காம ஏத்திவிடுறதுன்னு நம்ம PR Strategy பரந்து விரிந்து இருக்குங்க..ஆமா அப்படியே நான் திருக்குறளுக்கு ஒரை எழுதிக்கிழிக்கிறேன் இதுக்கு வெளம்பரம் ஒண்ணு தான் குறைச்சல்.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
பாடிக்கு சேதாரமில்லாத சொந்த விஷயங்களை மட்டும் பகிர்ந்துக்கொள்வதால். இதுவரைக்கு வூட்ல சோத்துக்கு பிரச்சனையில்லாம போவுதுங்க.கண்டதை எழுதி எதுக்கு ஒடம்பை சேதாராமாக்கிகணும் சொல்லுங்க?
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இதெல்லாம் ரெகுலரா எழுதுறவங்களை பாத்து கேக்க வேண்டிய கேள்விங்க. நானெல்லாம் பஞ்சத்துக்கு பிளாகருங்க.என்னோட பதிவை மெயிண்டெயின் செய்யுறதுக்கு நான் கூகுளுக்கு தனியா காசு குடுக்கணும. அதனால நான் இதை pass பண்ணிகிறேங்க.
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
பிளாகருக்கு காசுன்னா இந்த பக்கமே எட்டிப்பாத்து இருக்க மாட்டேன். இலவசமுன்னா செத்து போன கொள்ளுபாட்டிக்கும் சேத்து வாங்கலைன்னா தமிழனா ஒத்துக்க மாட்டாங்கில்ல அதனால ஒண்ணுக்கு நாலு வெச்சி இருக்கேன்.
சந்தோஷ்பக்கங்கள் - என்னோட முதன்மையான பதிவு. அடிக்கடி இங்க தான் பொங்குவேன்.
பயாஸ்கோப் - எனக்கு புடிச்ச வீடியோக்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பிச்ச தளம்.
Fix My India - அப்படின்னு ஒரு குழுப்பதிவு. ஆரம்பிச்சதோட அப்படியே நிக்குது.
SQLSpy - நான் புடுங்குற ஆணி எந்தூருல இருந்து வந்தது, அதை எப்படி புடுங்கினேனுன்னு இங்க எப்பயாச்சும் எழுதுவேன்.
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பொறாமை ம்ம்ம்.. நெறைய பதிவர்களை பாத்து வருமுங்க சிலரை அவர்களுடைய எழுத்துக்காகவும், சிலரை அவர்களுடைய thoughts and attitudeக்காகவும், சிலரது ஆழமான subject ஞானத்தை பாக்கும் பொழுதும், சில பதிவர்களின் நகைச்சுவை பதிவுகளை படிக்கும் பொழுதும் பொறாமையில பொசுங்கிடுவேன்.
என்னோட பொறாமை லிஸ்டு ரொம்ப பெருசு. அதுல சிலது குசும்பன்,டுபுக்கு,ஆதி,அம்பி,கேபிள்,தெ.கா,மங்கை மேடம்,குழலி,செந்தழல் ரவி,பரிசல்,PIT கோஷ்டி,ஜீவ்ஸ்,கவிதா மேடம்,சர்வேஸ்,பத்ரி,கார்கி, மா.சி,அண்ணாச்சி,உருப்படாடது நாராயணன்,KRS மற்றும் பல பல பதிவர்கள்.நான் பின் தொட்ரும் பெரும்பாலான பதிவர்கள் என்னோட பொறாமை லிஸ்டுல அடங்குவாங்க.
வெண்பூ,ஜோ,அப்துல்லா,சஞ்ஜை,மங் சிங்,வெங்கி,மின்னலு,நைஜீரிய மாபியா ராகவன் சித்தப்பூ,ரங்க்ஸ்,கோபி,ஆதவன் இவங்கெல்லாம் பதிவர்களுன்னு சொல்லி பதிவர்களை அசிங்கப்படுத்த விரும்பவில்லை ஆனா பதிவுலகத்தால் நான் அடைந்த நல் இதயங்கள்.
இல்லாத பிரச்சனைகளை ஊதி பெருசாக்குற சொம்பு நசுங்கிய பிளாக்காமைங்க,போலி பெண்ணியம்பித்தாளைங்க, அப்புறம் காலைங்காத்தால கக்கா வரைலன்னா கூட அதுக்கு காரணம் IT மக்கள்தான் பதிவு எழுதுற பக்கிங்களை எல்லாம் பாத்தா அப்படியே பத்திகிட்டு வரும்.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதல் பின்னூட்டம் இட்டவர் இவரு தாங்க (இதுக்கு அவரு ரொம்ப பீல் பண்ணதா கேள்விப்பட்டேன்). நிறைய பேரு பாராட்டி இருக்காங்க (செத்து போன என் கொள்ளு தாத்தா சத்தியமா). சில நண்பர்கள் மச்சி ரொம்ப சோகமா இருந்திச்சிடா உன் பதிவை படிச்சேன் நல்லா சிரிச்சேன் இப்ப feeling betterன்னு சொல்லும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
ஒரு வரலாறு தன் வரலாற்றை சொல்லாது அதனால் என் உரையை இங்கேயே முடிச்சிகிறேன்.
இது ஒரு தொடர் பதிவு எனக்கு தெரிந்து எல்லாரும் எழுதி முடிச்சிடாங்க அதனால சந்து பொந்துல, இந்து இடுக்குல எழுதாத பதிவருங்க இருந்தா இதையே invitationஆ எடுத்துகிட்டு எழுதுவிங்களாம.

வம்சம் - தும்சம்
Monday, August 16, 2010
என்னாடா மாப்ள வீக் எண்ட் பிளானுன்னு? ஒண்ணும் இல்லடா பானா காத்தாடி போவலாமுன்னு சொன்னதுலஆரம்பிச்சதுங்க சனி.சனி தான் தனியா போவாதே ரெண்டு மூணு பேரை உசுப்பேத்துனதுல தேறுன பாலாவை (ரூம் மேட்) ரெடி பண்ணி தியேட்டருக்கு போனா பானா காத்தாடியை தூக்கிட்டு வம்சத்தை போட்டு இருக்காங்க.காலைக்காட்சி முடிஞ்சி வெளியே வந்த மக்கள் எல்லாம் ஏதோ டயனோசர் தொறத்துற மாதிரி தியேட்டரை விட்டு ஓடினாங்க அப்பவே சுதாரிச்சி ஓடியிருக்கணும்.சரி பசங்க இயக்குனரின் படமாச்சேன்னு நம்பி ஒக்காந்தோம்.
எங்களை போல மனதைரியம் உள்ள பத்து பேரோட படமும் ஆரம்பிச்சது. ஒப்பனிங் எல்லாம் நல்லா தான் இருந்திச்சி அழகான கிராமம் அதுல கலர்புலான திருவிழாவின் ஆரம்பம். திருவிழா நடந்துட்டு இருக்கும் பொழுது திடீரென சவுண்டு கட் ஆச்சி, ஆனா படம் மட்டும் ஓடிட்டு இருந்திச்சி, என்னாடா இதுன்னு யோசிக்க டிரை பண்ணிட்டு இருக்கும் பொழுதே. யாரோ ஒரு பையன் லைட்டா சப்பானி எபக்டுல ரெண்டு உதடுக்கும் நடுவுல வெள்ளையா ஏதோ தெரிய நடந்து வந்தாப்ல(விசாரித்துல தெரிஞது தம்பி smiling intro குடுக்குறாராமா).
என்னடான்னு பாத்தா ஹீரோவை வித்தியாசமா இண்ட்ரோ பண்றாங்களாம்(இவங்க வித்தியாசத்தை வாணெலியில் போட்டு வறுக்க).அப்பவே எழுந்து ஓடலாமுன்னு கிளம்புனவங்களை கேட்டை பூட்டி வெளிய விடமாட்டேன்னுட்டாங்க.
கதை ஹுக்கும் கதையை கேட்டு என்னா செய்ய போறீங்க கழுதை அது கிடக்குது (அதை எழுத ஆரம்பிச்சதுல பதிவு உ.தா அண்ணன் பதிவை விட பெருசா போனதால அதை லூஸ்ல விடுறேன்). இங்க படத்தோட ஹைலைட்ஸை மட்டும் பாக்கலாம்..
ஹீரோ நல்லவருன்னா நல்லவரு அப்படி ஒரு நல்லவரு.ஊர்ல இருக்குற நல்லவங்க எல்லாம் ஒ அவர ரொம்ப ரொம்ப நல்லவராச்சேன்னு புகழ்கிற நல்லவரு. நல்லா படிக்கிற ஏழை புள்ளைங்களுக்கு ஸபான்சர் புடிச்சி படிக்க வெக்கிறாரு,கொட்டாம்பட்டி கிராமத்துல 120செகண்டுக்கு சிவப்பு விழுகுற சிக்னலுக்கெல்லாம் வண்டியை off பண்ணிட்டு வெயிட் பண்றாரு(அவரை பாத்து அந்த சிக்னலில் இருக்குற ஆயிரக்கணக்கானவங்களும் வண்டியை off பண்ணுறாங்க).படு பயங்கர சாதுவா இருக்குற ஹீரோ பிகருக்கு பிரச்சனைங்கிற பொழுது வழக்கமான தமிழசினிமா மாதிரி பொங்கிடுறாரு.மத்தபடி படம் முழுக்க நடக்குறாரு,ஓடுறாரு,சைடு போஸ் குடுக்குறாரு,அப்புறம் ஏதொ பண்ண முயற்சி செய்றாரு,மொத படங்கிறதால மன்னிச்சி விடலாம்.
ஹீரோயினை பத்தி சொல்லவே தேவையில்லை. த்ரிஷாவுக்கு அடுத்து தமிழ் பட உலகம் கண்டெடுத்த அலகு தேவதை.அவங்களுக்கு கிராமத்து காஸ்ட்யூம்
வேறயா யப்பாஆஆஆ.ஒண்ணு லவ் பண்ணுறாங்க இல்ல சாணி தண்ணி பக்கெட்டை + துடைப்பம் எடுத்து யார் மேலயாச்சும் ஊத்த கிளம்பிடுறாங்க கேட்டா பழிவாங்குறாங்களாமா.
வில்லன் இவரு பயங்கர கெத்தாமா,கீழ விழுந்த துண்டை எடுத்து தோளில் போட மாட்டாராம.. போங்கடா போங்க இதெல்லாம் சினிமா கண்டுபுடிக்கிறதுக்கு முன்னாடியே நாங்க பாத்துட்டோம்.
வில்லனோட பையன் அதை விட பெரிய டெரரு கார்ல ரெண்டு பொமளைங்க ரெண்டு பக்கெட் சாணிதண்ணியோட அலையுறாரு என்னாடான்னு கேட்டா அவங்கப்பா மேல சுனைனா சாணி தண்ணி ஊத்துனதுக்கு பழிக்கு பழி வாங்குறாராமா.இந்த படத்துக்கு வந்தோம் பாரு அதுக்கு நீ அதை எங்க
மேல தாண்டா ஊத்தணும்.
காமெடி..செல்போனை மரத்தின் உச்சியில் கட்டி அதுல பேசுவது, பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை கஞ்சா கருப்பு அவங்கப்பா பெயரை சொல்லி ஏண்டா என்னைய இந்த உலகத்துக்கு அனுப்பினேங்கிற மாதிரி பீல் பண்ணுவது தான் காமெடியாமா.
படத்தோட ஹைலைட்டே சண்டைக்காட்சிகள் தான்..கொய்யால அவங்க அம்மாகிட்ட யாரையும் அடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டதால ஹீரோவை யார் அடிக்க தொரத்தினாலும் ஓடுறாரு ஓடுறாரு .. பாக்குற நமக்கே கால்வலிக்குற அளவுக்கு மணிக்கணக்கா ஓடுறாரு...
இவர் தான் இப்படின்னா ஹீரோவோட அப்பாவுக்கு படம் முழுக்க குடுக்குற பில்டப்புக்கு அவராச்சும் ஒரு கும்மு பைட்டை போடுவாருன்னு பாத்த, அவரை அடிக்க வருகிற கூட்டத்தை பாத்து சிலம்பத்துல பதினெட்டு வகை இருக்குன்னு சொல்லி அத்தோட பெயரை சொல்ல அதைக்கேட்ட கூட்டம் வம்சம் படத்தை பாத்துட்டு தறி கெட்டு ஓடுற மாதிரி ஓடுது.
ஒண்ணு ஓடுறாங்க இல்ல ஓடவெக்கிறாங்க சரியான ஓடுகாலி வம்சமாவுல்ல இருக்கு.இப்படி ஓட்டப்பந்தயங்கள் சே சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் இது.
படு சுவரஸ்யமாக துவங்கும் திருவிழா பிளாஷ்பேக் முடிந்த உடன்..கொய்யால எப்படா இந்த திருவிழா முடிஞ்சி தொலையுமுன்னு தோணுற அளவுக்கு இழுவோ இழுன்னு இழுத்து தள்ளி இருக்காங்க.ஒரு கட்டத்துக்கு மேல படத்துல சொல்ல மேட்டரே இல்லை. டேய்ய்ய் வில்லனை இப்ப நீ கொல்றியா இல்ல நானே வந்து கொல்லட்டுமான்னு ரசிகர்கள் கத்துற அளவுக்கு க்ளைமேக்ஸை இழுத்து வெறியேத்துறாங்க.
படத்துல நல்ல விஷயங்களே இல்லைன்னு சொல்ல முடியாது.கேமிரா அருமையான கேமிரா. நாம மறந்த, மறைந்துகொண்டு இருக்கிற கிராமிய வாழ்க்கை,பழக்க வழக்கங்கள் பற்றி பல நுணுக்கமான விஷயங்கள் சொல்லியிருக்காரு.பணத்துக்காக எந்த மாதிரியான வாழ்கை முறையை நாம் இழந்து கொண்டு இருக்கிறோமுன்னு அழகா நமக்கு காட்டுது.
மத்தபடி வம்சம் பாக்குறவங்க வம்சத்தையே தும்சமாக்குது படம் ஓடுற தியேட்டர் பக்கம் கூட போயிடாதிங்க.சாரி பாண்டியராஜன் உங்ககிட்ட இருந்து பெட்டரா எதிர்ப்பாத்தேன்.