தமிழனாலே fraud அப்படின்னு பொதுவா இப்ப சொல்ல ஆரம்பிச்சிடாங்க. அதுவும் சக தமிழனை ஏமாத்துறதுல அவனுக்கு அலாதி இன்பம். என்னுடைய வாழ்கையில் நடந்த சிலவற்றை பாருங்களேன்.
இங்க வந்து ஒரு ஆறு மாசம் ஆவுங்க இதுல ஒரு 4-5 தடவை தமிழனோட ஆட்டோவுல போயி இருப்பேன் அதுல எல்லா தடவையும் தலையில மொளகா அரைச்சிட்டானுங்க. மினிமம் கூட பெறாத இடத்துக்கு சுத்தல விட்டு 30-40ன்னு கறந்து இருப்பானுங்க. ஒரு தபா சும்மா 200 அடி கூட இருக்காதுங்க நான் தேடி வந்த இடம் ஒரு தமிழ் ஆட்டோகாரன் கிட்ட கேட்டேன். சார் ரொம்ப தூரமுன்னு சொல்லி ஒரு 20 கறந்துட்டான், அதுவும் எப்படி சார் நான் அந்த வழியா தான் போறேன் அதனால 20ரூ மட்டும் குடுங்கன்னு ரொம்ப நல்லவன் மாதிரி சொன்னான். அப்ப முடிவு பண்ணவன் தான் ஒன்லி பீட்டர்ஸ் மிஞ்சி போனா மிரு எவரண்டி, ஜரகண்டி தான். அப்புறம் மறந்தும் கூட தமிழன் ஆட்டோ இருக்குற திசைபக்கம் போறது இல்ல.
இன்னொரு நாள் பஸ்ல கண்டக்டர் அசிங்க அசிங்கமா திட்டுட்டு இருந்தான் என்னடான்னு பாத்தா ஒரு தங்கத்தமிழன் நிக்கிறான். விசாரிச்சு பாத்தா பழைய daily bus passஜ காட்டி ஏமாத்தி இருக்கான். விளைவு தமிழ்நாட்டுல இருந்து வர நாயிங்களே அப்படின்னு கண்டக்டர் சொல்றாரு.
இன்னொரு நாள் ஒரு தமிழன் தனியா நின்னு திட்டிகிட்டு இருந்தான் என்னடான்னு கேட்ட இவன் ரொம்ப யோக்கியம் மாதிரி சார் ஒருத்தன் 30 ரூபாய் Bus Pass 15 தரேன்னு சொன்னான் நானும் வாங்கினேன் பாத்தா அது பழசு.
வழக்கமா பொங்கல் அப்படின்னு ஒரு தமிழ் ஓட்டலில் சாப்புடுவேன் முன்னாடியெல்லாம் டோக்கன் சாப்பாட்டுக்கு டோக்கன் இருக்காது இப்ப கொஞ்ச நாளா டோக்கன் ஏன்னு கேட்ட நிறைய பேர் சாப்பிட்டுவிட்டு காசு குடுக்காம அப்படியே ஜீட் விடுறாங்களாம். இந்த லட்சணத்துல அதுல சாப்பிட வருவதில் பெரும்பாலோ சாப்டுவேர் என்ஜினியருங்க.
இப்படி ஒரு இடத்துல ரெண்டு இடத்துல இல்லிங்க தெரியாத இடத்துல சந்திச்ச தமிழர்களில் 100க்கு 70 பேர் ஏமாத்து பேர்வழியாக தான் இருக்கான். சரி இந்தியாவுல தான் இப்படின்னா, அமெரிக்கா போன பொழுது எனக்கு பசங்க சொன்ன முதல் மேட்டரு, உனக்கு தெரியாத இந்தியன்கிட்ட அதுலையும் முக்கியமா தமிழன் கிட்ட ரொம்ப பேச்சு குடுக்காத முக்கியமா மொபைல் நம்பரை குடுக்காதன்னு.
கேட்டேனா, ஒருத்தன் என்னோட நண்பனோட பெயரை சொல்லி அவனோட ஜுனியருன்னு அப்படி இப்படின்னு சொல்லி போன் நம்பரை வாங்கினான். அப்புறம் அந்த நாயி நிதமும் போன் போட்டு உயிரை வாங்கிச்சி 300 டாலரை குடு அத பண்ணலாம் இதை பண்ணலாமுன்னு ஒரு தபா புள்ளைங்க தண்ணியை போட்டு காலாய்க்க ஆள் இல்லாம இருந்தாங்க அப்ப இவனுக்கு போன் போட்டு குடுத்தேன் அப்புறம் தான் அவன் நிப்பாட்டினான். இப்படி நாலு அஞ்சி பேர் டார்ச்சர் பண்ணானுங்க.
சரி நமக்கு தான் இப்படின்னு பாத்தா வெளிநாட்டுக்கு போற எல்லாரும் இப்படி தான் சொல்லுறாங்க.மலேசியாவுல, சிங்கையில, துபாயில எங்கயெல்லாம் தமிழன் இருக்கானோ அங்கயெல்லாம் இப்படி தான் தமிழன் நடத்துகிறான். தமிழன் என்றொரு இனமுண்டு அதற்கு தனியே சில குணமுண்டுன்னு இதை தான் சொன்னாங்களா? இப்படி ஒருத்தன் விடாம கண்ணுல படுகிற எல்லாரையும் ஏமாத்திகிட்டு திரிந்தால் எவன் நம்புவான். முதலில் சக தமிழன் நம்பினால் தானே மத்தவன் நம்புவான்?
ஒரு மலையாளியை இன்னொரு மலையாளத்தானோ இல்ல ஒரு ஆந்திராகாரனை இன்னொரு ஆந்திராகாரனோ ஏமாற்றியதாக கேள்விப்பட்டு இருக்கோமா? நல்லா கவனிச்சி பாத்தா தமிழன் எங்கயெல்லாம் போறானோ அங்கயெல்லாம் தனிமைபடுத்தப்பட்டு அடிவாங்கிட்டு தான் இருக்கான்.இதுக்கு இன்னொரு காரணம் வேலைக்கு போன இடத்துல பொத்திட்டு வேலையை மட்டும் செய்துட்டு இருந்தா பரவாயில்லை உதா. மலேசியா. இதுவே மலையாளியை பாருங்க எங்கயாவது போராட்டம் செய்றானா (கேரளாவை தவிர்த்து)ஆனா தன்னையும் உயர்த்திகிட்டு தன்னுடைய சக மனிதர்களையும் உயர்த்துறான். ஏன் தான் இப்படி இருக்கோமோ எப்ப தான் திருந்த போறோமோ?
நீங்களும் சக தமிழன்கிட்ட ஏராளமா ஏமாந்து இருப்பீங்க அதையும் கொஞ்சம் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

8:06 PM
திரைகடல் ஓடியும் திரவியம் திருடு என்று யாராவது புதுமொழி சொல்லிக்கொடுத்திருப்பாங்க...
குறிப்பாக தமிழன் என்று தெரிந்தால் சக தமிழன் மிளகாய் அரைப்பதில் வல்லவன்...
தமிழன் என்றாலே "இளிச்சவாயன்" என்பது எழுதப்படாத விதி..
அந்த டெக்னிக்கை இப்போது மலையாளி, ஆந்திரன், கன்னடன் என்று எல்லோரும் புரிந்துகொண்டார்கள்...
அதனால் தான் மேனன்களும் நாராயணன்களும் தமிழனின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்கள்...
கோமாளிகூட்டம் காங்கிரசு தமிழன் உயிரை புழுவுக்கு கூட மதிக்கமாட்டேன் என்கிறது..
ஓட்டுப்பொறுக்கி காங்கிரசு சொல்கிறது ராசீவ் காந்தி ஆவி மன்னித்துவிட்டாலும் காங்கிரசு தமிழன் மன்னிக்கமாட்டான் என்று..
இந்திராகாந்தி ஆவி, மகாத்மா காந்தி ஆவி எல்லாம் இப்போதைக்கு அவுட் ஆப் போக்கஸில் பார்க்கிறது...
ராஜீவ் ஆவி மட்டும் ஐபிகேஎப் பஞ்சாப் ரெஜிமண்டுகள் கற்பழித்து கொன்ற தமிழச்சிகளின் ஆவியோடு இன்னும் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது...
அப்பாவித்தமிழர்கள் குண்டுவீச்சில் மடியும்போது இங்கே அரசியல் கணக்குகளும் பழையகதைகளும் பேசும் அரசியல்வாதிகளும்...ச்சே...
வியட்நாமிலும் மாசேதுங்கின் மக்கள் ராணுவத்திடமும் அடிவாங்கிய வல்லரசுகள் அந்த பழைய கதைகளை புதிய ஆயுதங்கள் மறக்கடித்துவிட்டன போலும்..
சே தமிழனின் காவாளித்தனங்களை சொல்ல ஆரம்பித்த பின்னூட்டம் எங்கியோ போய் முட்டிக்கிட்டு நிக்குது...
ஐயாம் சாரி...
தமிழ் நண்டு கதை தெரியாதா ????
11:48 PM
ரவி,
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை. விடுதலைப்புலிகள் lobby அவ்வுளவு சக்திவாய்ந்தது இல்லைன்னு நினைக்கிறேன். :((.. உங்க ஆதங்கத்தை நல்லாவே புரிந்து கொள்ள முடிகிறது இதுக்கு எதுக்கு மன்னிப்பு எல்லாம் :)..
//தமிழ் நண்டு கதை தெரியாதா ????//
தெரியும் சாமி நல்லாவே தெரியும்...
12:09 AM
//நீங்களும் சக தமிழன்கிட்ட ஏராளமா ஏமாந்து இருப்பீங்க அதையும் கொஞ்சம் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.//
பின்னூட்டம் என்ன ... பதிவு பதிவா பதியலாம் ... அந்த அளவுக்கு கொட்டி ... மன்னிக்கவும் .. கெட்டுக் கிடக்குது இங்கே :))))
இந்தியாவிலிருந்து, சிங்கையிலிருந்து, அகெரிக்கா வரை என் வாழ்விலும் இந்த பயணம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது :)))
12:11 AM
முக்கியமா நெருங்கிய நண்பர்கள் இந்த மாதிரி இருக்கும்போது தான் வேதனை கடலினும் பெரிதாகிறது :((
3:38 AM
நானும் அப்படித்தான் நினைச்சுட்டு இருந்தேன் சிங்கப்பூர்ல இருந்த வரைக்கும். அப்புறம் கனடா வந்தப்புறம், ஆந்திரத் தெலுகர் வட்டம், பஞ்சாபியர் வட்டம்ன்னு, நான் படிச்ச பல்கலைக்கழகத்து நண்பர்கள் மூலமா நட்பு வட்டம் பெருசாயிட்டே இருந்துச்சு.
அப்ப பார்க்க நேர்ந்தது என்னன்னா, அவிங்க அவிங்க, அவிங்க சார்ந்த இனத்தை நொந்துகிட்டாங்க. இப்பக் கூட, சென்னான்னு ஒரு ஆந்திரக்காரன், மத்த தெலுகு நண்பர்களை கொத்தடிமை மாதிரி தன்னோட நிறுவனத்துல நடத்துறான்னு அவனோட நண்பர்கள் வசை பாடினதக் கேக்க முடிஞ்சது. ஆகவே, இது தமிழ் இனத்துல மட்டும் இப்படி நடக்குதுன்னு ஒருத்தர் சொன்னா, அது மத்த இனத்தோட அவருக்கு அவ்வளவா அனுபவமில்லைன்னுதான் நான் சொல்லுவேன். மாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும்!
12:31 AM
//
இந்தியாவிலிருந்து, சிங்கையிலிருந்து, அகெரிக்கா வரை என் வாழ்விலும் இந்த பயணம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது :)))//
ஹஹஹ.. கண்டிப்பா நீங்க நிறைய பார்த்து இருப்பீங்க.. :) முதல் முறையா வருகிறீர்கள் அப்படின்னு நினைக்கிறேன். உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி..
12:32 AM
//முக்கியமா நெருங்கிய நண்பர்கள் இந்த மாதிரி இருக்கும்போது தான் வேதனை கடலினும் பெரிதாகிறது :((//
ஆமாம் சார் இந்த வேதனை மிகப்பெரியது.. அதன் ரணம் ஆற ரொம்ப வருஷம் ஆகும்..
12:35 AM
//அது மத்த இனத்தோட அவருக்கு அவ்வளவா அனுபவமில்லைன்னுதான் நான் சொல்லுவேன்.//
நீங்க சொன்ன கருத்து சரியாக கூட இருக்கலாம். எனக்கு மற்ற இனங்களுடன் பழகிய அனுபவம் கம்மி தான் :).. ஏன்னா வாய்ப்புக்கள் அவ்வுளவா அமையவில்லை..
//மாற்றுக் கருத்துக்கு மன்னிக்கவும்!//
பதிவுலகமே மாற்றுக்கருத்தை மறைக்காம வெளியிட தானே இருக்கு.. மாற்றுக்கருத்துக்களும் விவாதங்களும் தான் பதிவை பத்திரிக்கைகளில் இருந்து இதை வேறு படுத்துகிறது.. கவலைப்படாதிங்க என்னக்கு மாற்றுக்கருத்து சொல்றவங்களை எதிரியாக பார்க்கும் குணம் இல்லை :)..
4:24 AM
லண்டனில் இலங்கைத்தமிழர்கள் செய்யும் திருட்டுத்தனங்களால். கொஞ்சம் கருப்பா இருக்கிற(அட நம்ம தாங்க) எல்லா இந்தியனையும் திருடனாவே பார்க்கிறார்கள்.
ஒரு வங்கிக்கணக்கு கூட ஆரம்பிக்கமுடியவில்லை.
12:56 PM
நெசமாவா சொல்றீங்க!!!!!
12:37 AM
//லண்டனில் இலங்கைத்தமிழர்கள் செய்யும் திருட்டுத்தனங்களால். கொஞ்சம் கருப்பா இருக்கிற(அட நம்ம தாங்க) எல்லா இந்தியனையும் திருடனாவே பார்க்கிறார்கள்.
ஒரு வங்கிக்கணக்கு கூட ஆரம்பிக்கமுடியவில்லை.//
ஒ இது வேறயா ??
12:37 AM
//துளசி கோபால் said...
நெசமாவா சொல்றீங்க!!!!!
//
டீச்சரம்மா சத்தியமா சொல்லுறேன்...
12:24 PM
அமுல், நம்ம டகால்டி வேலையெல்லாம் மத்த மொழிக்காரனுங்ககிட்டே செல்லாதுல்லா... அதான், தமிழனை மட்டும் டார்கெட் செய்யிறோம் :)
சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழனுக்கு எதிரி, தமிழன் தான். நம்ம பதிவுலையும் இத லைட்டா தொட்டு இருக்கேன். 'தமிழன் என்றொரு இனமுண்டு'
12:29 PM
//அமுல்,//
தல வேணாம் அழுதுடுவேன்..
// நம்ம டகால்டி வேலையெல்லாம் மத்த மொழிக்காரனுங்ககிட்டே செல்லாதுல்லா... அதான், தமிழனை மட்டும் டார்கெட் செய்யிறோம் :)
//
ஆமா அதெல்லாம் ரொம்ப சரியா செய்வோம்
Post a Comment