பொதுவா போட்டிவெச்சி அதுல கெலிக்கிறவங்களுக்கு சோப்பு டப்பா குடுப்பாங்க, சீப்பு குடுப்பாங்க இல்லாட்டி புக் குடுப்பாங்க இவிங்க என்னடா சிங்கப்பூருக்கு கூப்பிடுறாங்களேன்னு நாலு பேரை சம்பளத்துக்கு வெச்சி கதை கவிதை எழுத வெச்சா இவிங்க என்னடான்னா, கருத்தாய்வோ கம்மர்கட் முட்டாய் செய்யுன்னு இல்ல சொல்றாங்க..கதை கவிதைக்கே வழியில்லாம சம்பளத்துக்கு ஆள் வெச்சி எழுதுறோம்..இன்னான்னே புரியாத இதுக்கு எங்க போறதுன்னு யோச்சி என்னைய மாதிரி நாலு பதிவருங்களை கூகிள் அரட்டையில புடிச்சி இது இன்னான்னு கேட்டா இதை மாதிரி தெரியாத பாஷையில எல்லாம் திட்டுற வேலை வெச்சிகாதேன்னு சொல்லிட்டு அன்னிக்கு போனவங்க தான் அப்புறம் அரட்டை பொட்டியில ஆளையே காணோம்..ஒரு வேளை கருத்து”ஆய்”வுன்னா பாத்ரூம் மேட்டறோன்னு நெனைச்சி அந்த பக்கம் போயி யோச்சி நாறிட்டு வந்தது தான் மிச்சம்.
இதனால சிங்கை பதிவர்களே.. கருத்தாய்வுன்னா இன்னான்னு அல்லாருக்கு புரியிற மாதிரி வெளக்கிட்டு அப்பாலிகா போட்டியை வெச்சா கலந்துகணுமுன்னு நெனைக்கிறவங்களுக்கு நல்லா இருக்கும்.. அப்புறம் போட்டி தளத்துல ஒரு பதிவு மாதிரி போட்டு அதுக்கு பின்னூட்டம் போடுற வசதியை செய்து கொடுத்திங்கண்ணா என்னைய நக்கீரனுங்களுக்கு கேள்வியை மட்டும் கேட்டுட்டு நடையை கட்ட வசதியா இருக்கும். அப்படி இல்லாட்டி Faq பகுதியையோ இல்லை தமிழ்வெளியில இருக்குற மாதிரி சேட் (சவுக்கார் பேட்டை சேட்டு இல்லிங்க வெட்டி பேச்சி பேசுவாங்களே chat அந்த சேட்) மூலம் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் வசதி செய்து குடுத்தா நல்லா இருக்கும்.
இதெல்லாம் செய்து குடுத்தா நீ எழுதி கிழிச்சிடுவியான்னு குசும்பனை மாதிரி கேக்குற ஆளுங்களுக்கு நான் சொல்லிகிறது என்னானா..நம்ம அறிவுக்கும் அழகுக்கும் புக்கர் பரிசுக்கோ,நோபல் பரிசுக்கோன்னா எழுதலாம்..சிங்கப்பூருக்கு போறதுக்கும் சிலுக்குவார்பட்டிக்கு போறதுக்குமா எழுத முடியும்..போங்கப்பூ போயி புள்ளைங்களை படிக்க வெயிங்கப்பூ..ரைட்டு வரட்டா அப்ப நெக்ஸ்டு மீட் பண்ணலாம்..
சந்தோஷங்களுடன்
சந்தோஷ்...

2:22 PM
ஏன் நல்லாத்தானே இருந்தது.. இப்ப எதுக்கு இப்படி. கமெண்ட் போட வந்தா விளம்பரம்லாம் காட்டுது. இது கொஞ்சம் கூட நல்லால்ல..
நான் கமெண்டு போட்டு நீ இப்படி சம்பாதிக்கறதுக்கு கருத்தாய்வு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு சிங்கப்பூர் போயிட்டு வந்திருக்கலாம் :)
2:52 PM
//நம்ம அறிவுக்கும் அழகுக்கும் //
இல்லாத ரெண்டை பற்றி உனக்கு என்ன வெட்டி பேச்சு வேண்டி கிடக்கு!
உன் பதிவை படிச்சு அதுக்கு கமெண்ட் போடுவதே பெரிய கொடுமை, இதுல 15 செகண்ட் விளம்பரம் வந்து அப்பாலிக்காதான் கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் ஆவுது! என்ன கொடுமை சந்தோஷ் இது:((((
7:23 PM
$#Q$#&$&$ :)))))
7:59 PM
//சென்ஷி said...
ஏன் நல்லாத்தானே இருந்தது.. இப்ப எதுக்கு இப்படி. கமெண்ட் போட வந்தா விளம்பரம்லாம் காட்டுது. இது கொஞ்சம் கூட நல்லால்ல..
நான் கமெண்டு போட்டு நீ இப்படி சம்பாதிக்கறதுக்கு கருத்தாய்வு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு சிங்கப்பூர் போயிட்டு வந்திருக்கலாம் :)
//
இல்லப்பா ஒரு தப்பான செட்டிங்க தேர்வு செய்ததால் இப்படி ஆயிடிச்சி.. இப்ப சரி பண்ணிட்டேன்பா..
8:13 PM
//உன் பதிவை படிச்சு அதுக்கு கமெண்ட் போடுவதே பெரிய கொடுமை,//
பதிவை படிக்கறீயா.. அதுல படிக்க என்னா இருக்கு.. அய்யோ அய்யோ.. இது எப்ப இருந்து..
// இதுல 15 செகண்ட் விளம்பரம் வந்து அப்பாலிக்காதான் கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் ஆவுது! என்ன கொடுமை சந்தோஷ் இது:((((//
எடுத்தாச்சிப்பா எடுத்தாச்சி..
8:21 PM
//கோபிநாத் said...
$#Q$#&$&$ :)))))
//
ஏன்பா ஏன் இப்படி அசிங்க அசிங்கமா திட்டுறா...
9:56 PM
Dear Santhosh,
Thanks for sharing, we will discuss with Manarkeni and reply for this... I am sorry for typing in English...
Kuzhali
Yov, periya imsai ya irukku pinnotam poda login seyya mudiyali....
9:41 AM
ஏலேய் அமுல்டப்பா,
இப்போ என்னா ஒன்னோட பிரச்சினை? அதுதான் போட்டி அறிவிப்பு’லே தெளிவா கொடுத்துருக்கோம்’லே.. ?
பதிவர்கள் அறிவார்ந்த தலைப்புகளில் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுதுறதில்லை’னு பொது கருத்தை ஒடைக்கிற மாதிரி இந்த தலைப்புகளிலே எழுதுங்கன்னு..
இசுகூலே படிக்கறிப்போ கட்டுரை எழுதுவே’லே அதுமாதிரி கூட எழுதி அனுப்பவேண்டியதுதானே.. நீதான் அநியாத்தை கண்டா பொங்குற ஆசாமி தானே... :))
மவனே முன்னாடி எப்பவோ என்னையே நீ புதரகம் வந்தா ப்ளேட்’குள்ளே நாயை விட்டு கடிக்க வைக்கிறேன்னு சொன்னேலே, இங்கன நீ வா மவனே.. எதை விட்டு கடிக்க வைக்கிறோமின்னு தெரியும்... :))
9:46 AM
கடவுளே எப்படியாச்சும் சந்தோஷை இந்த போட்டியில ஜெயிக்க வைச்சிடு. நாய் எங்க கடிக்குதுன்னு படிக்க் ஆசையா இருக்குது :)
9:39 AM
ஹ்ம். ரூம் போட்டு யோசிக்க வேண்டியதுதான்.
12:34 AM
//சென்ஷி said...
கடவுளே எப்படியாச்சும் சந்தோஷை இந்த போட்டியில ஜெயிக்க வைச்சிடு. நாய் எங்க கடிக்குதுன்னு படிக்க் ஆசையா இருக்குது :)//
எலேய்ய். இம்புட்டு நாள் கழிச்சா இந்த கமெண்டை ரிலீஸ் செய்வே.. என்னாச்சு தூங்கிட்டியா! :)
12:55 AM
சென்ஷி,
சாரிபா உன்னோட பின்னூட்டம் மட்டும் கவனிக்காம விட்டுட்டேன்.... :(
Post a Comment