அரவான் - எலக்கியம் தெரியாத பாமரனின் பார்வையில் :)

சந்தோஷத்தின் வகை:

திரை விமர்சனம் எழுதி ரொம்ப நாள் ஆச்சி.. எப்படி ஆரம்பிக்கிறது... ஒரு நல்ல ஐடியா சொல்லுங்களேன்..டிவியில Retelcast பண்ற பழைய படங்களுக்கு விமர்சனம் எழுதுற மூதேவி உனக்கு எதுக்கு இந்த பில்டப்பு சீனுன்னு கேக்குறீங்களா? சரி சரி எதுனாலும் பேசி தீத்துகலாம்.. இப்படி பப்ளிக்கா பாராட்டாதிங்க. பர்சனல் பஞ்சாயத்துங்களை அப்புறம் பாத்துகலாம் இப்ப விமர்சனத்தை பாக்கலாம்.

படத்தோட கதைக்களம் பண்டைய தமிழகத்தின் தொழில்களான களவும் காவலும். என்னடா திருடன் போலிஸ் கதையான்னு கடுப்பாவாதிங்க.. படத்தோட கதை அதுவல்ல. பசுபதி களவு தொழில் செய்யும் கும்பலை சேர்ந்தவன், ஆதி ஒரு காவல் கூட்டத்தை சேர்ந்தவன். இவங்க ரெண்டு பேரும் ஒரு கட்டத்துல சந்திக்கிறாங்க.. ஆதியோட பிண்ணனி பத்தி எதுவுமே தெரியாம பசுபதி ஆதியின் ஆற்றலை பார்த்து கூட்டத்துல சேத்துகிறாரு.. நோ நோ நீங்க நெனைக்கிற மாதிரி ஆதி அந்த கூட்டத்துல வேவு பாக்க எல்லாம் வரலை (தமிழ் படங்கள் உங்களை எப்படியெல்லாம் ரோசிக்க வெக்குது பாருங்க). ஒரு கட்டத்துல ஆதி பற்றிய உண்மைகள் தெரிய வருது. அந்த உண்மை என்ன அவர் ஏன் களவுக்கூட்டத்துல சேந்தாரு, அதுக்கு அப்புறம் என்ன நடக்குதுன்னு தியேட்டருக்கு போயி பாத்து தெரிந்து கொள்ளுங்க.

படத்துல நிறைய சின்ன சின்ன விஷயங்களை நல்லா பண்ணி இருக்காங்க. திருட்டு நகையை வாங்குற செட்டியார் தங்கத்துல செம்பு கலந்து இருக்குன்னு சொல்லி ஏமாற்றுவது, ஊருக்கு வெளிய போயி கேழ்விறகை வாங்கிக்கோன்னு சொல்றது, களவுக்கு போறதுக்கு முன்னாடி போயி துப்பு கேக்குறது,  அந்த காலத்து பண்டமாற்று சந்தை முறைகள், அளவீடுகள், நிறைய புதிய தமிழ் சொற்கள், பாளையக்கார்கள், தேவதாசிகளுன்னு பண்டைய மக்களின் குழு வாழ்க்கையை பற்றி ஒரு glimpse அழகா குடுக்குது.  ஆதிக்கு அசால்டா காமெடி வருது, படத்துல ஆதி வரிப்புலி பாத்திரத்துக்கு சரியா பொருந்தி வருகிறார் அதே மாதிரி பசுபதியும்.

படத்தோட விஷுவல்ஸ் அசத்தல், காட்சிகள் அவ்ளோ அழகா இருக்கு. அடுத்து பாராட்ட பட வேண்டிய விஷயம் இயக்குனர் தேர்ந்தெடுத்த கதைக்களம் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் பத்தி கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவுது. இதுக்காகவே இயக்குனருக்கு பரிசலோட ராயல் சல்யூட்டுல ஒண்ணை வெக்கலாம். தனியா கேட்டப்ப புடிக்காத பாடல்கள் படத்துடன் பார்க்கும் பொழுது நல்லா இருந்தது. ஆனாலும் இத்தனை பாடல்கள் தேவையில்லை ஒன்றிரண்டு குறைத்து இருக்கலாம்.

படத்தின் குறைகளில் முதலாவது படத்தை அகல உழுது இருக்காங்க, இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டு கமர்ஷியல் விஷயங்களை தளர்த்தி இருந்தா ஒரு அருமையான வரலாற்றுப்படமா வந்து இருக்கும். அடுத்தது சிங்கம்புலி, தயவு செய்து யாராச்சும் அவர்கிட்ட காமெடிங்கிறது ஓலை பாயில ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி நச நசன்னு ஹைபிட்சுல கத்துறது இல்லைன்னு சொல்லுங்கப்பா. இவர் வருகிற ஒவ்வொரு காட்சியும் செம எரிச்சலா வருது. அடுத்த எரிச்சல் வில்லனாக வருகிற (கபீர் பேடி) கொய்யால படம் முழுக்க ஒரே எக்ஸ்பிரஷன் & பார்வை. பசுபதியோட சூப்பர் ஹீரோ பில்டப்பை குறைச்சி இருக்கலாம் ஒரு கிராமமே அவரை நம்பி இருக்குற மாதிரி காட்டுறது ரொம்ப ஓவரு.

முதல் பாதியில் வருகிற களவு காட்சிகள், களவாட போறதுன்னா fair  & lovely வாங்க சந்தைக்கு போற மாதிரிங்கிற பீல் வருது. படத்தோட முதல் பகுதியில களவை பற்றி இன்னமும் கொஞ்சம் விளக்கி இரண்டாவது பாதியில் சில காட்சிகளை தவிர்த்து இருந்தா படத்தோட திரைக்கதை தீயா பறந்து இருக்கும். அதே மாதிரி சண்டைக்காட்சிகளும் கிராபிக்ஸ் காட்சிகளும் இன்னமும் கொஞ்சம் மேம்படுத்தி இருக்கலாம்.

படத்துல சில இடங்களில் லாஜிக் இடிச்சாலும், ஆறு தலைமுறையா களவாடவே முடியாத ஊருக்குள்ள அசால்டா போயி களவாடியதும் இல்லாம மாட்டிக்கொண்ட பசுபதியை ஏதோ ஸ்கோல் முடிந்து பிள்ளையை வீட்டுக்கு கூட்டிட்டு வர மாதிரி ஆதி மாடு மேல போயி கூட்டிட்டு வர இடத்துல லாஜிக் மேல மிலிட்டரி டேங்க் ஏறி இறங்குது. பழங்கால தமிழர்களை பத்திய கதையின்னாலே பட்ஜெட்டுல கரிக்கு ஒரு பெரிய தொகை ஒதுக்கிடுவாங்க போல..ஹீரோயினை தவிர்த்து மத்த எல்லாருக்கும் அனல் மின் நிலையத்துக்கே பற்றாக்குறை வருகிற அளவுக்கு கரி அள்ளி பூசி இருக்காங்க.

படம் மரண தண்டனைக்கு எதிரானதுன்னு படிச்சிட்டு இறுதிக்காட்சியில் யாரோ ஒருத்தங்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மரண தண்டனைக்கு எதிரா பக்கம் பக்கமா வசனம் பேசப்போறாங்கன்னு எதிர்ப்பாத்தேன் நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கலை.

சில குறைகள் இருந்தாலும் முதல் பாதியில படத்துதோட மொத்தமா ஒன்றிப்போறோம் அதுவும் படத்தோட காட்சிகளும் வாவ். சில இடங்களையும் காட்சிகளையும் பார்க்கும் பொழுது அடுத்த வீட்ல எவன் இருக்கான்னு கூட தெரியாம அண்டார்டிகாவுல செத்துட்டு இருக்குற சீல்களுக்காக பீல் பண்ணிட்டு இருக்குற கேவலமான இந்த வாழ்க்கையை விட்டு பழைய வாழ்க்கை முறைக்கே திரும்பிடலாமுன்னு தோணுது.

ஏழாம் அறிவு, அரவான் போன்ற வரலாற்று படங்களுக்கு திரையரங்குகளில் மக்கள் குடுக்குற ரெஸ்பான்ஸை பாத்தா தமிழ் ரசிகர்கள் ஒரு நல்ல வரலாற்றுப்படத்துக்கு காத்துட்டு இருக்காங்கன்னு தோணுது.  ஆங்கிலப்படங்களை போன்ற வரலாற்றுப்படங்கள் கூடிய சிக்கிரம் தமிழில் வரும்,வரணும். ஆனா அதுக்கு ரொம்ப மெனக்கெடணும் அரவான் மாதிரியான படங்கள் இதுக்கு ஒரு நல்ல துவக்கம், மொத்ததுல அரவான் அசத்துரான்.

கூடிய விரைவில் இன்னொரு புதிய படத்தோட (ஹிஹி நெஜமாலுமே புது படமுங்க) விமர்சனத்துடன் உங்களை சந்திக்கும் வரை சந்தோஷங்களுடன் விடைபெறுவது சந்தோஷ்..
14 பேர் கருத்து சொல்லி இருக்காங்க நீங்களும் சொல்லலாமே:

\\\ஏழாம் அறிவு,\\

இதெல்லாம் ஓவரோ ஒவரு ;-))


ம்ம் உம்மை நம்பி பார்க்கலாம் போல இருக்கு! இதுவரை விமர்சனம் எழுதினவங்க எல்லாருமே எலக்ஸ் என்பதால் கொஞ்சம் பயம் இருந்தது!


vikatanla peru vanthalum vanthathu. thalaivar alumbu thanga mudiyalai


Yes. You are right. Our superstar KOCHADIYAN is coming with bang.


//பண்டைய தமிழர்களின் வாழ்வியல்//
1800 varusha kathai ungalukku pandaya kathaiya?


கோபி நான் சொல்ல வந்தது.. ஏழாம் அறிவோட முதல் பத்து நிமிஷங்களை. அதுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு.


அருணையடியாரே பாக்கலாம் எலக்ஸ் சொல்ற மாதிரி படம் மொக்கையெல்லாம் இல்லை.


ஜெய் ஒரு பதிவு எழுதினது குத்தமாய்யா?

1800 வருஷத்துக்கு முந்தையது பண்டைய கதை இல்லையா ஜெய் என்ன கொடுமை இது.


சாமி,
எனக்கு என்னவோ அது கமர்ஷியல் மசாலாவா தான் இருக்குமுன்னு தோணுது. பாக்கலாம்.


//1800 வருஷத்துக்கு முந்தையது// illai. 200 varushaththukku munnadi nadantha kadhai . a.d. 1800


//கேழ்விறகை வாங்கிக்கோன்னு சொல்றது//

இந்த விறகை வச்சு அடுப்பு கிடுப்பு எரிக்கலாமா?

#கேழ்வரகு


////1800 வருஷத்துக்கு முந்தையது// illai. 200 varushaththukku munnadi nadantha kadhai . a.d. 1800//

ஒ சாரி ஜெய்..


////கேழ்விறகை வாங்கிக்கோன்னு சொல்றது//

இந்த விறகை வச்சு அடுப்பு கிடுப்பு எரிக்கலாமா?

#கேழ்வரகு

3:38 PM//

ஹிஹி ;)) சாரி தல மாத்திடுறேன்..


நல்ல விமர்சனம்.

அரவான் தமிழ் வரலாற்று சினிமா முயற்சியில் ஒரு நம்பிக்கையை விதைத்த படம். கதை எப்படி இருந்தாலும் அதை காட்சிப்படுத்திய விதம் மிக அருமை.

சம காலத்தில் தமிழில் வந்த மற்ற வரலாற்று படங்களை விட இது நன்றாக இருக்கிறது.


உலகம் இன்னுமா என்னைய நம்பிட்டு இருக்கு?

எல்லாம் ஒரு வெளம்பரம் தான்

Udanz

இதுவரைக்கும் சந்தோஷப்பட்டவங்க